டான்சி நிலத்தை தந்துர்றோம்: நீதிமன்றத்திடம் கெஞ்சும் ஜெ, சசி
சென்னை:
டான்சி நிலத்தை மீண்டும் அந்த நிறுவனத்திடமே திரும்பத் தந்துவிடும் வகையில் முடக்கி வைக்கப்பட்ட அந்த நிலத்தை விடுவிக்குமாறுநீதிமன்றத்தில் சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார்.
அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை முதல்வர் ஜெயலலிதாவும் அவரது உ.பி. சகோதரி சசிகலாவும் முறைகேடாக அபகரித்தாகவழக்குப் போட்டர் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி.
இதில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடுங்காவல் தண்டனை கிடைத்தது.
ஆனால், உயர் நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலாவை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது.
இந்த விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார் சுவாமி. ஜெயலலிதாவைக் கூட மன்னிக்கத் தயாராக இருக்கும்சுவாமி, சசிகலாவை விடுவதாக இல்லை.
இந்த வழக்கில் தனக்கு எதிரான தண்டனை கிடைக்கும் என ஜெயலலிதாவை நம்ப ஆரம்பித்துவிட்டார். இதனால் மாற்று முதல்வரை தேர்வுசெய்யும் பணியும் கூட தொடங்கிவிட்டது.
தனக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் கடந்த முறை பன்னீர் செல்வத்தைத் தேர்வு செய்தது போலவே சசிகலா சமூகத்தைச் சேர்ந்தஒருவரையே முதல்வராக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இந்தமுறை அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் பதவிதரப்படலாம் என்று பேச்சு நிலவுகிறது.
இந் நிலையில் டான்சி நிலத்தை மீண்டும் அந்த நிறுவனத்திடமே வழங்கிவிடுவதாக ஜெயலலிதாவும் சசிகலாவும் உச்ச நீதிமன்றத்திடம்தெரிவித்துள்ளனர்.
ஆனால், அந்த நிலத்தை நீதிமன்றம் முடக்கி வைத்துள்ளது. எனவே அதை விடுவிக்குமாறும்,
நிலத்தை மீண்டும் டான்சி நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடுவதாகவும் ஜெயலலிதாவும் சசிகலாவும் கெஞ்சி வருகின்றனர்.
உச்ச நீதிமன்றம் தவிர சென்னை உயர் நீதிமன்றத்திலும் இது தொடர்பாக மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந் நிலையில் முடக்கி வைக்கப்பட்ட நிலத்தை விடுவிக்குமாறு சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திடமும் சசிகலா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது சசிகலாவின் மனு குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் (ஜெயலலிதா தரப்பு)கருத்து கேட்டார் நீதிபதி.
அப்போது பேசிய அரசு வழக்கறிஞர், முடக்கப்பட்ட நிலத்தை விடுவிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றார்.
ஆனால், அவரை பாதியில் தடுத்த நீதிபதி, சும்மா வெறுமனே நிலத்தை விடுவிப்பதில் ஆட்சேபணை இல்லை என்று மொட்டையாகக் கூறக்கூடாது. ஏன் ஆட்சேபணை இல்லை என்பதைத் தெரிவிக்க வேண்டும். சசிகலா முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்பதால்இதில் பல சந்தேகங்கள் வர வாய்ப்புள்ளது.
எனவே, ஏன் ஆட்சேபணை இல்லை என்பது குறித்து முழுமையான விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த மனு இன்று மீண்டும் விசாரிக்கப்படும்.












Click it and Unblock the Notifications