தமிழகத்துக்கு தொடர்ந்து 9,000 கனஅடி நீர் விட உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
தமிழகத்துக்கு வரும் 6ம் தேதி வரை தினமும் வினாடிக்கு 9,000 கன அடி நீரைத் தர வேண்டும் எனவும் 7ம் தேதி முதல் தொடர்ந்துவினாடிக்கு 6,000 கன அடி நீரைத் தர வேண்டும் எனவும் கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று புதிய உத்தரவு பிறப்பித்தது.
அதே நேரத்தில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைததது.
இந்த அவமதிப்பு வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி கிர்பால் தலைமையிலான டிவிஷன் தீர்ப்பை 15ம்தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தது.
ஆனால், அதுவரை தாங்கள் குறிப்பிட்ட அளவு நீர் தமிழகத்துக்கு எந்தத் தடையும் இல்லாமல் போய்க் கொண்டே இருக்க வேண்டும் எனநீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:
எங்களது இந்த உத்தரவை பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம் வேண்டுமானால் திருத்தி உத்தரவிடலாம். எவ்வளவுசீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நதி நீர் ஆணையம் கூடி முடிவெடுக்கலாம். ஆனால், அப்போது உச்ச நீதிமன்றத்தை கர்நாடகம்மதிக்காமல் நடந்து கொண்டதை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் எந்தத் தீர்ப்பையும் ஆணையம் அறிவிக்கக வேண்டும்.
மேலும், தமிழகத்தில் சம்பா பயிர் பயிரிடப்பட்டுள்ளதால் அதைக் கெடுக்கும் வகையில் நீரை இடையில் நிறுத்தும் செயல்களில் கர்நாடகம்ஈடுபடக் கூடாது என்றனர்.
அப்போது பேசிய கர்நாடக வழக்கறிஞர் அனில் தவான், கர்நாடகத்தில் அவ்வளவாக மழை பெய்யவில்லை. இந் நிலையில் தொடர்ந்துஇந்த அளவு நீரைத் தந்தால் தமிழத்துக்குத் தந்துவிட்டால் கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே, நீரின் அளவைக் குறைக்கவேண்டும் என்று கோரினார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், அது குறித்து காவிரி நதி நீர் ஆணையம் கூடி முடிவு செய்யலாம். இன்று நள்ளிரவு முதல் 6ம் தேதி வரைதமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 9,000 கன அடி நீர் தர வேண்டும். அதன் பின்னர் நீரின் அளவை கர்நாடகம் குறைத்துக் கொள்ளலாம்.7ம் தேதியில் இருந்து, 1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 6,000 கன அடி நீர்விட வேண்டும்.
இந்த வழக்கு விசாரணை வரும் 15ம் தேதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும். அதுவரை இந்த பார்முலாவைப் பின்பற்றி தமிழகத்துக்குகர்நாடகம் நீர் விட வேண்டும். இந்த உத்தரவை பிரதமர் தலைமையிலான நதி நீர் ஆணையம் கூடி மாற்றிக் கொள்ளலாம். தமிழகத்துக்குஎவ்வளவு நீர் விட வேண்டும் என்பதை ஆணையம் முடிவு செய்யலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
நீரை விடுவோம்.. ஆனால்:
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையடுத்து நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக சட்ட அமைச்சர் சந்திரே கெளடா,
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நாங்கள் தமிழகத்துக்கு நீரை விடுவோம். ஆனால், பிரதமர் வாஜ்பாய் உடனே காவிரி ஆணையத்தைக்கூட்ட வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் வாஜ்பாய்க்கு நாங்கள் 4 முறை கடிதம் எழுதிவிட்டோம். (ஆணையத்தைக் கூட்டினால்தமிழகத்துக்கு நீரை விட வேண்டாம் என்று உத்தரவிடுமாறு பிரதமரை கர்நாடகம் நெருக்கும்). ஆனால், அவரிடம் இருந்து எந்த பதிலும்இல்லை. மாநிலங்களை ஒற்றுமையாக வைக்க வேண்டுமானால் பிரதமர் இதில் தலையிட வேண்டும்.
கர்நாடகத்தில் எந்தவிதமான விளைவுகள் ஏற்பட்டாலும் என்ன நிலைமை உருவானாலும் சரி, தொடர்ந்து தமிழகத்துக்கு நீரை விடுவோம்என்றார்.
இதே சந்திரே கெளடா தான் கடந்த முறை இதே உச்ச நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டு, என்ன நடந்தாலும் சரி நீரை விட மாட்டோம்என்றார். இப்போது அடங்கி ஒடுங்கி பதில் தந்தார்.
வாரிவிட்ட பாண்டிச்சேரி:
இந் நிலையில் காவிரியில் பாண்டிச்சேரிக்கு உரிய நீரை தமிழகம் திறந்துவிடவில்லை என மத்திய அரசின் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேஇன்று உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டினார். பாண்டிச்சேரி அரசின் சார்பில் இந்தக் குற்றச்சாட்டை அவர் நீதிபதிகள் முன் வைத்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் வேணுகோபால், நடுவர் மன்றம் கூறியபடி உரிய நீரை பாண்டிச்சேரிக்கு தமிழகம்தொடர்ந்து வழங்கும் என்றார்.
கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசுடன் தமிழகம் மோதுவதால் பாண்டிச்சேரியில் உள்ள காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு எதிரானநிலையை எடுத்துள்ளது.
-
"பொது சிவில் சட்டம் தான் ஒரே தீர்வு.." முஸ்லீம் பெண்கள் பிரச்சனை.. அழுத்தமாக சொன்ன உச்ச நீதிமன்றம் -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
13 ஆண்டு கோமா.. 32 வயது இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி.. நாட்டிலேயே முதல் முறை -
ஓபிசி கிரீமிலேயர்.. பெற்றோரின் சம்பளத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது!












Click it and Unblock the Notifications