வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு வினியோகம் ஆரம்பம்
தஞ்சாவூர்:
காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகளின் வாழ்வில் இந்தத் தீபாவளி ஒருவழியாய் விளக்கேற்றிவிட்டது.
நத்தையும், நண்டும் பிடித்து உண்டு வரும் இப் பகுதியின் லட்சக்கணக்கான விவசாயக் கூலி மக்களுக்கு இப்போதுபெய்து வரும் மழை நெஞ்சை நிறைத்துவிட்டது.
நெருங்கிக் கொண்டிருக்கும் தீபாவளியை ஒளி மங்கிய கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகளுக்குமழை ஆனந்தக் கண்ணீரைத் தந்துவிட்டது.
தங்கள் வாழ்க்கையை இருளச் செய்த கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த சூடும், இதனால் காவிரியில் வந்துகொண்டுள்ள நீரும் இந்த மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முதல்வரின் தீபாவளி பரிசு:
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தீபாவளி பரிசுப் பைகளும் இந்த மக்களுக்கு நேற்று முதல்வழங்கப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை வரை இந்தப் பைகள் வழங்கப்படும்.
தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 10லட்சம் நிலமற்ற, ஏழை விவசாயிகளுக்கு தீபாவளிப் பரிசாக 10 கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, மற்றும் சிலசமையல் பொருட்கள் மற்றும் ரூ. 50 ரொக்கம் ஆகியவை அடங்கிய தீபாவளிப் பரிசுப் பொருட்கள் அடங்கிய பைவழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்திருந்தார்.
சொன்னது போலவே ரூ. 210 மதிப்புள்ள இந்தப் பரிசுப் பைகளை அரசு வழங்க ஆரம்பித்துவிட்டது. தஞ்சையில் 2லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கும், நாகையில் 2 லட்சத்து 5 ஆயிரம் விவசாயிகளுக்கும், திருச்சியின் பல்வேறுபகுதிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 75,000 விவசாயிகளுக்கும் இந்தப் பரிசுப் பைகள் நேற்றேவழங்கப்பட்டுவிட்டன.
இன்றும் நாளையும் இந்த தீபாவளிப் பரிசுப் பைகள் வழங்கப்பட உள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications