ஆந்திர பெண்களை அமெரிக்காவுக்கு கடத்தி செக்ஸ் கொடுமை

Subscribe to Oneindia Tamil

சிலிக்கன் வேலி:

தங்களை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குக் கடத்தி வந்து செக்ஸ் தொழிலில் ஈடுபடுத்தியதாக ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர்மற்றும் அவரது மகன்கள் மீது 9 பெண்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்காவில் பல விடுதிகளை நடத்தி வருபவர் ஆந்திராவைச் சேர்ந்த லாக்கி ரெட்டி (வயது 65). இவரும் இவரது இரு மகன்களும் ,இவரது இரு சதோதரர்களும் இந்தியாவில் இருந்து பெண்களை அழைத்து வந்து அமெரிக்காவில் செக்ஸ் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.

லாக்கி ரெட்டி ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி 8 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.

கடத்தி வரப்பட்டவர்கள் அனைவருமே ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தான். இவர்கள் அனைவரும் 17 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இவர்களால் பாதிக்கப்பட்டவர்களில் 9 பெண்கள் ஒன்று சேர்ந்து அமெரிக்காவின் ஆக்லண்ட் மாகாணத்தில் உள்ள அலமெடா கவுண்டிநீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்குத் தொடர்ந்தனர். அதில் பாலிரெட்டி, அவரது மகன்கள், உறவினர்கள் மீது இந்தப் பெண்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

தங்களை கொத்தடிமைகள் போல நடத்தியதாகவும், செக்ஸ் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் தங்களுக்கு 100 மில்லியன் டாலர் நஷ்ட ஈடுவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

மேலும் இந்தியாவில் இருந்து பெண்களைக் கடத்தி உலக அளவில் மிகப் பெரிய செக்ஸ் தொழில் நடத்தி வரும் பாலி ரெட்டியின்முகத்திரையைக் கிழிக்கவே இந்த வழக்குப் போட்டுள்ளதாக 9 பெண்களின் வழக்கறிஞரான மைக்கேல் ரூபின் கூறினார்.

இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் துவங்க உள்ளது.

இப்போதே லாக்கி ரெட்டி சிறையில் தான் உள்ளார். ஆந்திராவின் வெல்வடம் பகுதியில் இருந்து இளம் கிராமத்துப் பெண்களைசட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அழைத்து வந்து வீட்டு வேலைகள், கூலி வேலைகள், கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தியதாலும்செக்ஸ் தொழிலில் ஈடுபடுத்தியதாலும் இவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1999ம் ஆண்டில் இவரது வீட்டில் வேலைபார்த்துக் கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த இரு சகோதரிகள் கார்பன் மோனாக்சைட்வாயு தாக்கி பாதிக்கப்பட்டனர். அதில் 17 வயதான பெண் இறந்தார். இதையடுத்து ரெட்டி மீது வழக்குப் பதிவானது. விசாரணையில் தான்இவரது அந்தரங்கம் வெளியில் வந்தது.

அப்போதே பாதிக்கப்பட்ட 4 பெண்களுக்கு ரெட்டி 2 மில்லியன் டாலர்களை அபராதமாகத் தர நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவரது மகன் விஜய ரெட்டி மீதும் அந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட உள்ளது. இன்னொரு மகன் பிரசாத் ரெட்டி மீதான விசாரணைவரும் ஜனவரியில் தொடங்கவுள்ளது.

இந் நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது இந்த வழக்கைப் போட்டுள்ளனர். இந்த வழக்கில் லாக்கி ரெட்டியின்சகோதரர்களான ஜெயப்பிரகாஷ் ரெட்டி, வெங்கடேஸ்வர ரெட்டி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தங்களை ரெட்டியும் அவர்களது மகன்களும் செக்ஸ்ரீதியில் துன்புறுத்தியதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.

ரெட்டிக்கு அமெரிக்காவிலும் இந்தியாவிலும் 70 மில்லியன் டாலர் அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. இதில் ஒரு பகுதியையாவது பறித்துபாதிக்கப்பட்ட பெண்களுக்கு தர வேண்டும் என வழக்கறிஞர் மைக்கேல் ரூபின் நிருபர்களிடம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+