சென்னையில் பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக் கொலை
சென்னை:
சென்னையில் பிரபல ரவுடியை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
சென்னை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனி பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமாரி. இவர் அதிமுகவைச்சேர்ந்த முன்னாள் கவுன்சிலர். இவரது வீட்டுக்கு 6 பேர் கொண்ட ஒரு கும்பல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணியளவில் ஆட்டோவில் வந்தது.
வீட்டில் இருந்தவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி 80 பவுன் நகைகளைக் கொள்ளைடித்துக் கொண்டு தப்பியது.இதுகுறித்து கோடம்பாக்கம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து உடனடியாக தேடுதல் வேட்டையில் போலீஸார் இறங்கினர். அதில் ஒருவன் சிக்கினான்.அவனிடம் கிடைத்த தகவலை வைத்து மேற்கு மாம்பலம் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 5 பேரைபோலீஸார் துரத்திச் சென்றனர்.
அப்போது அவர்கள் ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்ப முயன்றனர். ஆனால், போலீசார் விரட்டிச் சென்று ஆட்டோடிரைவரை துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர்.
மேலும் ஒருவனையும் போலீஸார் பிடிக்க முயன்றபோது போலீசாரை அவன் அரிவாளால் வெட்ட முயன்றான்.கோடம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மீது அரிவாளால் தாக்கினான். இதில் அவருக்கு ரத்தக் காயம்ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக தன்னிடமிருந்த துப்பாக்கியால் அந்த கொள்ளையனை ராஜேந்திரன் சரமாரியாகச்சுட்டார். இதில் குண்டு பாய்ந்து அவன் அந்த இடத்திலேயே இறந்தான்.
சுட்டுக் கொல்லப்பட்டவனின் பெயர் ஸ்டாலின். இவன் பிரபல ரவுடியாவான். ஏற்கனவே 2 முறை குண்டர்சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்துள்ளான். அவன் மீது பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன.
ஸ்டாலினின் அரிவாள் தாக்குதலால் காயமடைந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications