நீலகிரி அருவிகளில் நீர் கொட்டுகிறது: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள பல்வேறு அருவிகளில்தண்ணீர் அதிக அளவில் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. நீலகிரியிலும் தொடர்ந்து கன மழை பெய்துவருகிறது.
இதனால் ஊட்டியில் உள்ள வெள்ளி அருவி, மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளி அருவி ஆகியஅருவிகளில் தண்ணீர் வெள்ளம் போல கொட்டுகிறது.
தற்போது ஊட்டியில் 2-வது சீசன் நடந்து வருவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்துள்ளனர்.
அருவிகளில் நிறைய தண்ணீர் கொட்டுவதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நடுங்கும் குளிரையும்பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் மணிக்கணக்கில் நின்று கொண்டு நீராடி மகிழ்கின்றனர்.
அருவிகளில் தண்ணீர் கொட்டுவதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றுதெரிகிறது.
-->


