சிறைக்குள் 100 நாட்களில் 200 புத்தகங்கள் படித்த வைகோ
வேலூர்:
கைதாகி 100 நாட்களுக்கு மேலாகியும் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ அதே சுறுசுறுப்புடன் வேலூர்சிறைக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சிவகாசி தொகுதியின் எம்.பியுமான வைகோவைச் சந்தித்து விட்டு வந்த அவருடைய கட்சிப் பிரமுகர்கள்கூறியதாவது:
சிறையில் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுகிறார். ஆனால் அவர் அடைக்கப்பட்டுள்ள தனியறையை காலை 6மணிக்குத் தான் சிறை அதிகாரிகள் திறந்து விடுவார்கள்.
அதனால் அதுவரை அவர் புத்தகங்களை எடுத்துப் படித்துக் கொண்டே இருப்பார்.
பின்னர் 6 மணிக்குக் கதவு திறக்கப்பட்டதும் மளமளவென்று சிறைக்குள்ளேயே "வாக்கிங்" கிளம்பி விடுகிறார்.
காலைக் கடன்களை முடித்த பின்னர் 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பார்வையாளர்களைச் சந்திக்கிறார்.தொடர்ந்து பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மீண்டும் தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் பேசுகிறார்.
தன்னைச் சந்திக்க வருபவர்கள் எதைக் கொடுத்தாலும் வாங்க மறுக்கும் வைகோ, புத்தகங்களை மட்டுமேகொடுங்கள் என்று கேட்டுக் கேட்டு வாங்கிக் கொள்வார்.
இதையடுத்து வளாகத்திற்குள்ளேயே மற்ற கைதிகளுடன் சேர்ந்து கொண்டு வாலிபால் விளாைடுகிறார்.
விளையாட்டை முடித்து விட்டு வைகோ தன்னுடைய அறைக்குத் திரும்ப, சரியாக மாலை 6 மணிக்கு அந்த அறைபூட்டப்படுகிறது.
தன்னைச் சந்திக்க வருபவர்களிடமிருந்து மட்டும் இதுவரை அவர் சுமார் 400 புத்தகங்களைப் பெற்றுள்ளார்.அதைத் தன்னுடைய அறையிலேயே வரிசையாக அடுக்கி வைத்துள்ளார்.
இரவு உணவை முடித்த பின்னர் தூங்கும் வரை படித்துக் கொண்டே இருப்பார் வைகோ. கிட்டத்தட்ட புத்தகப்புழுவாகவே மாறி விடுகிறார்.
படிப்பு... படிப்பு... படிப்பு... இது மட்டுமே தன்னுடைய முக்கியப் பொழுதுபோக்காகக் கொண்டுள்ள அவர் இந்த100 நாட்களில் சுமார் 200 புத்தகங்களைப் படித்துள்ளார் என்று மதிமுக பிரமுகர்கள் கூறினர்.
பொறுமையாகப் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் உள்ளவர்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர்களுக்குக்கவலையே இல்லை என்பதை வைகோ நிரூபித்து வருகிறார்.
-->
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications