அபிஷேகங்களால் தேய்ந்து போன உற்சவ சிலைக்கு மெல்லிய கவசம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பழனியாண்டவர் கோவிலில் உள்ள தண்டாயுதபாணி உற்சவ சிலை அபிஷேகங்களால் தொடர்ந்து தேய்ந்துபோகாமல் இருக்க அதன் மேல் மெல்லிய கவசம் பொருத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் பழனியாண்டவர் கோவில் உள்ளது.
இங்குள்ள தண்டாயுதபாணி உற்சவ சிலைக்கு நாள்தோறும் பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்துவருகின்றன. இந்தச் சிலை செய்யப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இவ்வாறு தொடர்ந்து அபிஷேகம் செய்து வருவதால் சிலை சிறிது சிறிதாகத் தேய்ந்து கொண்டே வருகிறது.
இதையடுத்து இந்தத் தேய்மானத்தைத் தடுத்து சிலையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்மேற்கொள்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் கூறிய ஆலோசனையின் படி தமிழக அரசுஎடுத்துள்ள முடிவுகளின் விவரம்:
- உற்சவ சிலையின் தேய்மானத்தைத் தடுக்க அந்தச் சிலைக்கு மெல்லிய கவசம் பொருத்தப்பட்டு, தொடர்ந்து அபிஷேகங்கள் நடைபெறும்.
- சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையில் பஞ்சலோகத்தால் ஆன மற்றொரு உற்சவ சிலை விரைவில் செய்யப்படும்.
- தற்போதுள்ள உற்சவ மூர்த்தி வெளியிலுள்ள சன்னிதியில் நிறுவப்படும்.
- மூலவர் சிலைக்கும் உற்சவ சிலைக்கும் தொடர்ந்து அபிஷேகங்களும், பூஜைகளும் வழக்கம் போல் நடைபெறும்.
- அபிஷேகத்திற்குத் தேவையான நீர் தூய்மைப்படுத்தப்படும்.
- "குமார தந்திரம்" என்ற ஆகம பயிற்சி பெற்ற கோவில் அர்ச்சகர்களுக்கு மறுபயிற்சி அளிக்கப்படும்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications