""காலாவதியான கருணாநிதி... கனவில் மிதக்கும் ஸ்டாலின்..."": கராத்தே கிண்டல்
சென்னை:
சென்னை மாநகராட்சியைக் கண்டித்து மண்டல அலுவலகங்கள் முன்பு தர்ணா நடத்தப் போவதாக திமுகஅறிவித்துள்ளதற்கு துணை மேயர் கராத்தே தியாகராஜன் கடும் கண்டனம் தெவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மாநகராட்சி மேயர் பதவியைத் துறந்து விட்ட ஸ்டாலின் தனது அடியாட்கள் மற்றும் அடிபொடிகளை விட்டுமாநகராட்சி நிர்வாகம் மீது அழுக்கையும், இழுக்கையும் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் மேயராகவும் ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் இருந்தபோதும், அவருடைய அப்பாமுதல்வராக இருந்தபோதும் இந்த நகரத்திற்காக என்ன செய்துள்ளார்? மாநகராட்சியில் ஸ்டாலின் வைத்து விட்டுப்போனது என்னவோ கடன்.. கடன்.. கடன் மட்டுமே.
மக்களுக்கு உழைத்தேன் என்று கூறிக் கொள்ளும் ஸ்டாலின், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள்பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?
இரண்டாவது முறையாக சென்னை மேயராக அவர் தேர்வு செய்யப்பட்ட பிறகு 13 இடங்களில் தீவிபத்துக்கள்ஏற்பட்டன. ஆனால் ஒரு இடத்தைக் கூட ஸ்டாலின் வந்து பார்த்து மக்களிடம் நலம் விசாரிக்கவில்லை.
கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டு நகரில் பாதிப்பு ஏற்பட்ட போதும் மக்களைசந்திக்கவில்லை ஸ்டாலின். அப்போதெல்லாம் பெங்களூருக்கு உல்லாச பயணம் போய் விட்டார் இந்த மக்கள்தொண்டர்.
கருணாநிதியின் காலடியிலேயே எப்போதும் கிடக்கும் ஆற்காடு வீராசாமி, எப்போதாவது அவர் ஜெயித்ததொகுதிப் பக்கம் போயிருப்பாரா?
இருந்தாலும் தற்போதைய மழையால் மக்கள் படும் அவதியை உணர்ந்து போர்க்கால வேகத்தில் நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார் முதல்வர். அவரது வேகத்தை உணர்ந்து மாநகராட்சி நர்வாகமும் வேகமாகசெயல்பட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
உண்மை இப்படியிருக்க மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திமுககூறியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களைத் திசை திருப்பச் செய்யும் முயற்சி தான் இது.
காலாவதியாகிப் போன கருணாநிதியும், எதிர்காலக் கனவில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஸ்டாலினும்கூறுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதற்கு இங்கு ஒருவரும் கிடையாது என்பதை இருவருமே புரிந்துகொள்ள வேண்டும் என்றார் கராத்தே தியாகராஜன்.
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications