மாறனை அமெரிக்கா கொண்டு செல்லும் சிங்கப்பூர் "ஏர் ஆம்புலன்ஸ்" சென்னை வந்தது
சென்னை:
மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நாளை காலை சிறப்பு "ஏர் ஆம்புலன்ஸ்" விமானம் மூலம் அமெரிக்காவுக்குக்கொண்டு செல்லப்படுகிறார்.
அவரை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லும் இந்தச் சிறப்பு விமானம் சிங்கப்பூரிலிருந்து இன்று பிற்பகல் 2மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது.
இன்று இரவோ அல்லது நாளை காலையோ இவ்விமானத்தின் மூலம் மாறன் அமெரிக்கா கொண்டுசெல்லப்படுவார். மாறனுடன் அவருடைய மனைவி மல்லிகா, மகன் கலாநிதி மாறன், மகள் டாக்டர் அன்புக்கரசிமற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் சில டாக்டர்கள் ஆகியோரும் இவ்விமானத்தில் செல்வார்கள்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற "மெதடிஸ்ட்" மருத்துவமனையில் தான் மாறன் சிகிச்சைபெறவுள்ளார்.
பூஞ்சைத் தொற்று காரணமாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மாறன்உயிருக்குப் போராடி வருகிறார். அவருடைய நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவை மோசமாகப்பாதிக்கப்பட்டன.
இதையடுத்து பிரதமர் வாஜ்பாயுடன் திமுக தலைவரும் மாறனின் மாமாவுமாகிய கருணாநிதி தொலைபேசியில்பேசியதைத் தொடர்ந்து மாறனை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தான் சிங்கப்பூரிலிருந்து சிறப்பு "ஏர் ஆம்புலன்ஸ்" விமானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்துமருத்துவ வசதிகளும் கொண்டுள்ள இந்த விமானத்தில் சிகிச்சை பெற்றவாறே மாறன் அமெரிக்காவுக்கு கொண்டுசெல்லப்படுகிறார்.
இந்த விமானத்திற்கான வாடகை மட்டும் ரூ.48 லட்சம் என்று கூறப்படுகிறது. மாறனின் அனைத்து சிகிச்சைசெலவுகளையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications