சேலம் அரசு மருத்துவமனையில் தொடர் சாவுகள்: 2 டாக்டர்கள் உள்பட 13 பேர் சஸ்பெண்ட்
சென்னை:
சேலம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 2 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஒரு சிறுமி இறந்ததைத் தொடர்ந்து2 டாக்டர்கள், 6 நிர்ஸுகள் உள்பட 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் அடிக்கடி நோயாளிகள் இறப்பது அதிகரித்து வருகிறது.
உச்சகட்டமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண் டாக்டர்களின் சரியானசிகிச்சை இல்லாமல் வயிற்றில் குழந்தையோடு பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து மேலும் ஒரு கர்ப்பிணிப்பெண்ணும் இறந்தார்.
இந்த நிலையில் ஒரு 6 வயது சிறுமி மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டாள்.அவளுக்கு டாக்டர்கள் ஊசி போட்ட சில நிமிடத்தில் அந்த சிறுமி மூச்சுத் திணறல் அதிகமாகி இறந்தாள்.
இந்த தொடர் சாவுகள் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சேலம் அரசு மருத்துவமனையில் எங்குபார்த்தாலும் லஞ்சம், லஞ்சம், லஞ்சம் தான். காசு கொடுத்தால் தான் வைத்தியம் பார்க்கிறார்கள் என்று பொதுமக்கள்கொந்தளிக்கத் தொடங்கினர்.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் கர்ப்பிணிப் பெண் மற்றும் சிறுமி சாவு தொடர்பாக பணியில் இருந்த 2டாக்டர்கள், 6 நர்ஸ்கள் உள்பட 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சென்னை மற்றும் கோயம்புத்தூரிலிருந்து டாக்டர்கள் குழு சேலம்விரைந்துள்ளது.
இதற்கிடையே இரண்டு டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதையடுத்து, சேலம் மாவட்ட அரசுமருத்துவர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் இன்று நடந்தது.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications