தனியார் கோவில்கள் மீட்பு: காஞ்சியில் 26ம் தேதி ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதிலும் தனியார்களிடம் உள்ள கோவில்களை மீட்பது தொடர்பாக விவாதிக்க காஞ்சிபுரத்தில்வருகிற 26ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திரசுவாமிகள் கூறினார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகம் முழுவதிலும் ஏராளமான கோவில்கள் தனியார் வசம் உள்ளன. இங்கு சரிவர பூஜைகள் நடக்காமலும்,பராமரிப்பு சரியாக இல்லாமலும் உள்ளன.
எனவே இவற்றை மீட்பது தொடர்பாக விவாதிக்க வரும் 26ம் தேதி காஞ்சிபுரத்தில் ஆலோசனைக் கூட்டம்நடைபெறவுள்ளது.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் தமிழகத்திற்கு மட்டும் தேவையானது அல்ல. இந்தியா முழுவதற்கும் அதுஅவசியமான சட்டம்.
இதை நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் மத்திய அரசும் இந்த சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றார்சுவாமிகள்.
-->












Click it and Unblock the Notifications