பணிந்தார் ஜெ.: பிரதமருக்கு எதிரான கடிதத்தை வாபஸ் பெற்றார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரதமரையும் அவரது தலைமையில் உள்ள காவிரி ஆணையத்தையும் மதிப்பதாக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் வாஜ்பாய்க்கு அவர் இன்று அனுப்பிய கடிதத்தில், அவர் மீது தனக்கு மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் இருப்பதாககூறியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன் காவிரி விவகாரம் உச்ச கட்டத்தில் இருந்தபோது காவிரி ஆணையத்தையும் பிரதரையும் கண்டித்துமுதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். பிரதமருக்கு அனுப்பிய அந்தக் கடிதத்தில் ஆணையத்தின் மீது எனக்கும் தமிழகமக்களுக்கும் நம்பிக்கையில்லை என்று கூறியிருந்தார். மேலும் கர்நாடகத்துக்கு ஆதரவாக பிரதமர் செயல்பட்டு வருவதாகவும்இதனால் அவர் மீது தனக்கிருந்த மதிப்பும் போய்விட்டதாகக் கூறியிருந்தார்.

இதை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. ஒரு பிரதமருக்குக் கடிதம் எழுதும்போது இப்படி பொறுப்பில்லாமல் முகத்தில்அடித்தார் போல எழுதுவது தவறு என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முதலில் ஆணையத்தை தமிழக அரசு மதிக்கிறதாஇல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதன் பின்னர் தான் இந்த வழக்கை எப்படிக் கையாள்வது என்பதை நாங்கள்முடிவு செய்வோம் என்று கூறியிருந்தனர்.

அப்போது பேசிய தமிழக வழக்கறிஞர் வேணுகோபால், ஆணையத்தை தமிழக அரசு மதிப்பதாகவும் அதை எதிர்த்து பிரதமருக்குஎழுதிய கடிதத்தில் கூறப்பட்ட வாசகங்களை தமிழக அரசு திரும்பப் பெறும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து 4 நாட்களுக்குள் பிரதமருக்கு புதிய கடிதம் எழுத வேண்டும், அதில் ஆணையத்தை மதிப்பதாக ஜெயலலிதாஎழுத்துப்பூர்வமாகக் குறிப்பிட வேண்டும் மேலும் பிரதமர் மீது தனக்கு முழு மரியாதை இருப்பதை ஜெயலலிதா அக் கடிதத்தில்சுட்டிக் காட்ட வேண்டும் என நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர்.

கடிதம் எழுதினார் ஜெ.:

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கடுமையான எச்சரிக்கையால் மிரண்டு போன ஜெயலலிதா, 4 நாள் கெடு இருந்தாலும் கூட,உடனடியாக இன்றே பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டார்.

அதில், உங்களுக்கு எதிராக முந்தைய கடிதத்தில் நான் சொன்ன வாசகங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். தனிப்பட்டமுறையில் பிரதமர் வாஜ்பாய் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரது தலைமையிலான காவிரி ஆணையத்தையும் நான்முழுக்க முழுக்க மதிக்கிறேன்.

பிரதமரையோ அல்லது காவிரி ஆணையத்தையோ அவமானப்படுத்தும் நோக்கத்தில் நான் அப்படி எழுதவில்லை. காவிரிப்படுகை விவசாயிகளின் நிலையை மனதில் வைத்து தான் அப்படி எழுதினேன்.

நான் உங்களுக்கும் ஆணையத்துக்கும் எதிராக குறிப்பிட்ட வாசகங்களை புறக்கணித்துவிடுங்கள். அவற்றை நான் வாபஸ்பெற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார். இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் கோபத்தில் இருந்து ஜெயலலிதாதப்பியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு எதிராக டான்சி தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெவுக்கு இதே வேலை: கருணாநிதி

இதற்கிடையே காவிரி ஆணையத்தை ஜெயலலிதா மதிக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை. இந்த விஷயத்தில் அவர்மக்களை தொடர்ந்து குழப்பி வருகிறார் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இந் நிலையில் கருணாநிதி இன்று நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:

முதல்வர் ஜெயலலிதா எல்லா விஷயங்களைப் போலவே இந்த ஆணைய விவகாரத்திலும் அனைவரையும் குழப்புகிறார். எந்தஅதிகாரமும் இல்லாத பல் இல்லாத பாம்பு என ஆணையத்தை முன்பு ஜெயலலிதா விமர்சித்திருந்தார். உச்ச நீதிமன்றம் தலையில்கொட்டியபிறகு இப்போதாவது தான் சொன்னது தவறு என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

எதிர் காலத்திலாவது இதுபோல பொறுப்பில்லாமல் செயல்படுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+