மதுரையில் விபச்சார வேட்டை: 7 பெண்கள், அரசியல்வாதி சிக்கினர்
மதுரை:
மதுரை மாநகர போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் 7 விபச்சார பெண்கள், ஒரு அரசியல்வாதி மற்றும்ஹோட்டல் மேனேஜர் ஆகியோர் சிக்கினர்.
மதுரை போலீஸ் உதவி கமிஷனர் ஹேமா பிரமிளா கருணாகரன் தலைமையிலான போலீஸ் குழு மதுரை நகரில்விபச்சாரத் தடுப்பு வேட்டையில்இறங்கியது.
அப்போது கிடைத்த தகவலின்பேரில் ஒரு குழு விருதுநகருக்கு சென்று சோதனையில் ஈடுபட்டது. இந்த அதிரடிசோதனையில், 7 பெண்கள், முக்கியமான அரசியல்வாதி ஒருவர், 2 ஹோட்டல் மேனேஜர்கள் ஆகியோர் உள்பட17 பேர் பிடிபட்டனர்.
சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த தீபா என்ற பெண் தூத்துக்குடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். வேலைவாங்கித் தருவதாக கூறி தன்னை ராஜாமணி என்பவர்தான் பெங்களூரிலிருந்து மதுரைக்கு அழைத்து வந்துவிபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக அவர் கூறினார்.
இதையடுத்து மகளிர் அமைப்புகள் போலீஸார் மீது குற்றம் சாட்டின. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி கோர்ட்,மதுரையில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஹேமா கருணாகரன் தலைமையிலான போலீஸ் குழுவுக்கு விபச்சாரத் தடுப்புப் பணிவழங்கப்பட்டது. ஹேமாவுக்குக் கிடைத்த ஒரு தகவலின் அடிப்படையில் திருமங்கலம் விரைந்த போலீஸார் அங்குஒரு லாட்ஜில் இருந்த புரோக்கர் ராஜாமணியைக் கைது செய்தனர்.
பின்னர் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விருதுநகரில் உள்ள முக்கிய ஹோட்டலில் விபச்சாரத்தில்ஈடுபட்டிருந்த பெண்கள் மற்றும் சில வாடிக்கையாளர்களைப் பிடித்தனர்.
அவர்களில் ஒருவர் மதுரை நகரைச் சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளியாவார்.
அதன் பிறகு மதுரை அழகப்பன் நகரில் உள்ள ஒரு பங்களாவில் சோதனை நடந்தது. இதுபோன்ற பல்வேறு சமூகவிரோத செயல்களுக்காகவே அந்த பங்களா பயன்படுத்தப்பட்டு வருவது சோதனையின்போது தெரிய வந்தது.
மொத்தம் 17 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஹேமா கருணாகரன், உதவி கமிஷனராகப் பதவியேற்ற 6 மாதங்களில் நடக்கும் 3-வது விபச்சாரத் தடுப்புவேட்டையாகும் இது. இந்தக் கும்பல்களுக்குத் தலைவன் பெங்களூரில் இருப்பதாகவும், விரைவில் அவன்பிடிபடுவான் என்றும் ஹேமா தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடி கோர்ட்டில் ஜாமீன் பெற்று விடுதலையாகி சென்ற தீபா தற்போது மீண்டும் விபச்சாரத்தில்ஈடுபட்டுள்ளதாக பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளதாக ஹேமா கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications