For Daily Alerts
Just In
வீரப்பனிடம் அன்பரசுவை தூது அனுப்ப தயார்: இளங்கோவன் கிண்டல்
சென்னை:
வீரப்பனிடம் பேசி நாகப்பாவை மீட்டு வரும் முயற்சியில் ஈடுபட காங்கிரஸ் தலைவர் அன்பரசு ஆர்வமாகஇருப்பதால் அவரை காட்டுக்குள் அனுப்ப தயார் என காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன்தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவராக இருப்பவர்களுக்கும் அன்பரசுவுக்கும் எப்போதுமே ஒத்துப் போவதில்லை. வழக்கம் போலஇளங்கோவனுடனும் அவர் மோதி வருகிறார்.
சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய அன்பரசு காட்டுக்குள் சென்று நாகப்பாவை மீட்கத் தயார் என்று வெட்டி வசனம்பேசியிருந்தார். இதையடுத்து அவரை காட்டுக்குள் அனுப்ப காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாக இளங்கோவன்கூறியுள்ளார்.
இதுகுறித்து இளங்கோவன் கூறுகையில்,
நாகப்பாவை மீட்க தூத செல்லத் தயார் என்று அன்பரசு கூறியுள்ளார். அவரை அனுப்ப நாங்களும் தயாராகஉள்ளோம். வழிச் செலவுக்கு கையில் காசு கொடுக்கவும் ரெடி.
-->


