கம்யூட்டர் சயின்ஸ் மாணவர்களை குழப்பிய மதுரை பல்கலை.
திண்டுக்கல:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த கம்யூட்டர் சயின்ஸ் மாணவர்களுக்குதவறான கேள்வித் தாள்கள் தரப்பட்டன. இதையடுத்து தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் 5வது செமஸ்டர் தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில்கம்யூட்டர் சயின்ஸ் மாணவர்களுக்கு டிஸ்கிரீட் ஸ்டக்சர்ஸ் என்ற பாடத்தின் தேர்வு நடப்பதாக இருந்தது.
ஆனால், தேர்வு மையங்களில் வந்து உட்கார்ந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டிஸ்கிரீட் ஸ்டக்சர்ஸ் பாடத்துக்குசம்பந்தமே இல்லாத கேள்விகள் அந்த கேள்வித் தாளில் இடம் பெற்றிருந்தன. ஒன்று, இரண்டல்ல பெரும்பான்மையானகேள்விகள் வேறு பாடங்களில் இருந்து கேட்கப்பட்டிருந்தன.
இதனால் குழம்பிப் போன மாணவர்கள் தங்கள் கல்லூரிகளின் நிர்வாகத்தினரிடம் முறையிட்டனர். இதைத் தொடர்ந்துபல்கலைக்கழக அதிகாரிகளுக்கு பல்வேறு கல்லூரிகளில் இருந்து தொலைபேசி மற்றும் தந்திகள் மூலம் தகவல் பறந்தது.
அப்போது தான் தவறான கேள்வித் தாள் உருவாக்கப்பட்டது பல்கலைக்கழகத்துக்கே தெரிந்தது. இதையடுத்து அந்தமாணவர்களை திருப்பி அனுப்புமாறும், தேர்வை ஒத்தி வைக்குமாறும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் தகவல் தந்தது.
இதையடுத்து அந்தத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. புதிய கேள்வித்தாள் உருவாக்கப்பட்டு கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டபின்னர் மறு தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும்.
-->
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications