ஜம்மூவில் ஊரடங்கு

Subscribe to Oneindia Tamil

ஜம்மூ:

ரகுநாத் கோவிலில் இருந்து தப்பியோடிய 3 தீவிரவாதிகளைத் தேடும் பொருட்டு ஜம்மூ நகரில் ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற ரகுநாத் கோவிலில் நேற்று இரவு புகுந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 13 பேரைச்சுட்டுக் கொன்றனர்.

பதிலடித் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இந்தக் கோவிலில் இருந்து தப்பியோடிய மேலும் சில தீவிரவாதிகள் ஜம்மூ நகருக்குள்ளேயேபதுங்கினர். இவர்களைப் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சுமார் 8 மணிக்கு சிவன் கோவில் அருகே ஒரு தீவிரவாதி திடீரென்று தோன்றிபாதுகாப்புப் படையினரை நோக்கிச் சுட ஆரம்பித்தான்.

உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர் பதிலடித் தாக்குதல் நடத்தி அவனைச் சுட்டுக்கொன்றனர். இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையும் 2 மணி நேரம் வரை நீடித்தது.

மொத்தம் ஐந்து தீவிரவாதிகள் நேற்று இரவு ஜம்மூ நகருக்குள் ஊடுருவினர். இவர்களில் இதுவரை மூன்றுதீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

மற்ற இருவரையும் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு ஹோட்டலில் அந்தத்தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அந்த ஹோட்டலைமுற்றுகையிட்டுள்ளனர்.

அவர்களைப் பிடிக்கும் வரை ஜம்மூ நகருக்குள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று போலீஸ் அதிகாரிஒருவர் தெரிவித்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+