ஜம்மூவில் பெர்னாண்டஸ், சோனியா
ஜம்மூ:
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான ரகுநாத் கோவிலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசும்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்று பார்வையிட்டனர்.
காங்கிரசும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில்காஷ்மீரில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ முகாமை தீவிரவாதிகள் தாக்கியதில் ஆறு பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு மறுநாளே ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த ஒரு ஜீப்பையும் கண்ணிவெடிவைத்து தீவிரவாதிகள் தகர்த்தனர். இதில் ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு ரகுநாத் கோவிலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இரண்டுபாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 13 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து சோனியா இன்று பிற்பகல் ஜம்மூவுக்கு வந்து ரகுநாத் கோவிலை நேரில் பார்வையிட்டார்.
மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீதைச் சந்தித்த பின்னர் சோனியா அந்தக்கோவிலுக்குச் சென்றார்.
சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்ட சோனியா, பின்னர் இதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதற்கிடைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசும் ஜம்மூ விரைந்துள்ளார். இன்று காலையிலும்தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே அவர் காஷ்மீருக்குச் செல்ல முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக முப்தி முகமது சயீத், காஷ்மீர் கவர்னர் கிரிஷ் சந்திரா, அம்மாநில துணை முதல்வர் மங்கத் ராம் ஷர்மாஆகியோர் இன்று காலை ரகுநாத் கோவிலுக்குச் சென்று தீவிரவாதிகள் தாக்கிய இடங்களைப் பார்வையிட்டனர்.
பின்னர் அவர்கள் ஜம்மூ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் சென்று தாக்குதலில் காயமடைந்த 52 பேரைச்சந்தித்து ஆறுதல் கூறினர்.
தீவிரவாதிகள் விஷயத்தில் முப்தி முகமது சயீத் மிகவும் மென்மையான போக்குடன் நடந்து கொள்வதால் தான்அவர்கள் இவ்வளவு மோசமான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதாக முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாகுற்றம் சாட்டினார்.
வேறு சில இந்து அமைப்புகளும் கூட இதுபோன்ற குற்றச்சாட்டை முப்தி மீது சுமத்தியுள்ளனர்.
காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே ஜம்மூ-காஷ்மீர் விடுதலைப் படையைச் சேர்ந்த சிலதீவிரவாதிகளை முப்தி விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications