ஒசூரில் 3 சகோதரிகள் தற்கொலை: கழுத்தை நெரித்து குழந்தை கொலை
ஒசூர்:
ஒசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். முன்னதாகஅவர்கள் 3 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
ஒசூரைச் சேர்ந்த அண்ணாத்துரை (35) என்பவர் அங்கு ஒரு மருந்துக் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் சவிதா(25) என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு லிகிதா என்ற 3 வயதுப் பெண் குழந்தை உண்டு. இவளுக்கு நேற்று காது குத்தும் நிகழ்ச்சிநடைபெறவிருந்தது.
இதற்காக சவிதாவின் தங்கைகளான அனிதா (23) மற்றும் விஜயலட்சுமி (20) ஆகியோர் ஒசூர் வந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மருந்துக் கடையை மூடிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார் அண்ணாத்துரை.
லேசாக மூடியிருந்த கதவைத் திறந்து கொண்டு அவர் உள்ளே சென்று பார்த்த போது சவிதா, அனிதா மற்றும்விஜயலட்சுமி ஆகிய மூன்று பேரும் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அண்ணாத்துரைஅதிர்ச்சி அடைந்தார்.
தரையில் லிகிதா கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாள். அருகிலிருந்த ஒரு கடிதத்தில் "எங்கள்சாவுக்கு யாரும் காரணமில்லை" என்று எழுதி மூன்று பெண்களும் கையெழுத்திட்டிருந்தனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரித்துவருகின்றனர்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications