வகுப்பறையில் தூக்கில் தொங்கிய மாணவி.. மதுரையில் பரபரப்பு
மதுரை:
மதுரையில் 12ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவி வகுப்பறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மானாமதுரை அருகே முத்தனேந்தலைச் சேர்ந்த போஸ் பாண்டி என்பவரின் மகள் ரேவதி (17).
இவர் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஹாஸ்டலில் தங்கியிருந்து 12ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்றிரவு வழக்கம் போல விடுதி மாணவிகளின் அட்டென்டென்ஸை எடுத்தபோது ரேவதியைக் காணவில்லை. இதையடுத்துஅவரை விடுதிக் கண்காணிப்பாளர், வாட்ச்மேன்கள் மற்றும் மாணவிகள் தேடினர். அப்போது, 10ம் வகுப்பு "பி" பிரிவுஅறையில் ரேவதி தான் போட்டிருந்த சுடிதாரின் துப்பட்டாவிலேயே தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து போலீசாருக்கும் ரேவதியின் தந்தை போஸ் பாண்டியனுக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
தகவல் கேள்விப்பட்டு விரைந்து வந்த மதுரை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் ஹரிஹரனும், தெப்பக்குளம்போலீசாரும் ரேவதியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக ஒரு கடிதத்தையும் ரேவதி எழுதி வைத்திருந்தார். அந்தக் கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், எனதுகுடும்பத்துக்கு நான் கெட்ட பெயரை வாங்கித் தர விரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு என்ன அர்த்தம், ஏன் அந்த மாணவி இவ்வாறு எழுதினார் என்று தெரியவில்லை.
பின்னர் ரேவதியின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக அனுப்ப ஏற்பாடு செய்தனர். ஆனால் அவருடையசாவுக்குக் காரணம் என்னவென்று தெரியாமல் பிணத்தை எடுக்க விட மாட்டோம் என்றும் உடனடியாக பள்ளிநிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி ரேவதியின் உறவினர்கள் சாலையில் உட்கார்ந்துபோராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இரவுமுழுவதும் இந்தப் போராட்டம் நடந்தது.
அதிகாலையில் இறுதியில் மாவட்ட வருவாய் அதிகாரிகளும் உயர் போலீஸ் அதிகாரிகளும் வந்து ரேவதியின்உறவினர்களுடன் பேச்சு நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். அதன் பிறகே ரேவதியின் உடலை பிரேதப்பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல அவர்கள் அனுமதித்தனர்.
ரேவதியின் தற்கொலை குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications