குஜராத் தேர்தல்.. திக்.. திக்..

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத்தில் தேர்தல் தேதி நெருங்கி வருகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று தான் கடைசி நாளாகும்.

மதக் கலவரத்தால் புண்பட்டுப் போயுள்ள குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதுஉறுதியாகிவிட்டது. பல்வேறு கருத்துக் கணிப்புகளும் மதரீதியில் பிளவுபட்டுள்ள குஜராத்தில் பா.ஜ.கவின் வெற்றியைஉறுதிசெய்துவிட்டன.

ஆனால், குஜராத் கலவரத்தில் பெரும் வன்முளை நடந்த அகமதாபாத்தின் நரோடா பாட்டியாவில் பா.ஜ.கவை எப்படியாவதுதோற்கடித்துவிட வேண்டும் என்பதில் அப் பகுதியின் இந்துக்களும் முஸ்லீம்களும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் உள்ள சிறுபான்மையினரின் வீடுகளில் ஆயிரக்கணக்கில் வாள்கள், கத்திகள், அரிவாள்களுடன் புகுந்தபா.ஜ.க., பஜ்ரங் தள், சிவசேனா, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பியினர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள்,முதியோர்களை வெட்டி வீழ்த்தினர்.

பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் பலாத்காரமும் செய்தனர். 3 வயது பெண் குழந்தையைக் கூட அக் கும்பல் விட்டுவைக்கவில்லை என உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையிலான மனித உரிமைக் குழு குற்றம்சாட்டியுள்ளது. நடு ரோட்டில் ஆயிரக்கணக்கோர் முன்னிலையில் பெண்களின் உடைகளைக் கலைந்து, 10-15 பேர் சேர்ந்துகற்பழித்துவிட்டு பின்னர் வெட்டியும் எரித்தும் கொன்றுள்ளனர்.

இது போல குஜராத் முழுவதும் சம்பவங்கள் நடந்திருந்தாலும் ஒரே இடத்தில் 60 பேர் எரிக்கப்பட்டது இந்த நரோடா பாட்டியாபகுதியில் தான்.

இந்தச் சம்பவத்தில் இப் பகுதி இந்துக்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேறு பகுதிகளில் இருந்துஇங்கு வந்த மதவாதக் கும்பல் இந்த கொடும் செயலைச் செய்தது.

இந்தக் கும்பலின் செயலை இப் பகுதி இந்துக்கள் மன்னிக்கத் தயாராக இல்லை. தங்கள் பகுதியின் மானத்தையே மதவாதிகள்வாங்கிவிட்டதாக இப் பகுதி இந்துக்கள் குமுறிக் கொண்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து வாழ்ந்து வந்த பகுதி இது. இப்போது பா.ஜ.கவை இந்தத் தொகுதியில்முறியடிப்பதில் முஸ்லீம்களைவிட இந்துக்களே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நேற்று தங்களது மத சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் முஸ்லீம்களுக்கு இந்துக்கள் இப்தார் ரம்ஜான் விருந்துஅளித்தனர். அதில் பேசிய பல இந்துக்களும் குறிப்பாக பெண்கள், பா.ஜ.கவை தோற்கடிக்க அனைவரும் ஒன்று சேர்வோம்என்றனர்.

ஹன்சா பென் என்ற இந்து பெண் கூறுகையில், என் பக்கத்து வீட்டில் இருந்த முஸ்லீம் வீட்டுக்குள் 100 பேர் கும்பல் சென்றது.எங்கள் கண் முன்னாலேயே அந்த வீட்டில் இருந்தவர்களை வெட்டிக் கொன்றனர். அதை பார்க்க முடியாமல், தடுக்கவும் முடியாமல்நாங்கள் அழுது நின்றோம். 20 ஆணடுகளாய் என் வீட்டின் அருகே வசித்த அந்தக் குடும்பம் 5 நிமிடத்தில் வெட்டுப்பட்டு, எரிந்துபோனது. அதை போலீசாரும் வேடிக்கை பார்த்தனர் என்றார் அழுதவாறே.

சுசீலா பண்டின் என்ற பெண் கூறுகையில், எனது பகுதிக்குள் நுழைந்து முஸ்லீம்களை கும்பல் தாக்கியபோது நான் தலையிட்டேன்.எனக்கும் அடி விழுந்தது. பல முஸ்லீம்களுக்கு நான் அடைக்கலம் தந்தேன். இதனால் என்னையும் என்னைச் சார்த்தவர்களையும்கும்பல் அடித்தது. ஆனால், அந்த அப்பாவிகளின் உயிரைக் காப்பதற்காக நான் அடி வாங்கியதை பெருமையாக நினைக்கிறேன்.யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை நாங்கள் சேர்ந்தே முடிவெடுப்போம் என்றார்.

இப் பகுதியில் இஸ்லாமிக் ரிலீப் கமிட்டி என்ற அமைப்பு 551 வீடுகளை கட்டி கலவரத்தில் வீடுகளை இழந்தவர்களுக்குதந்துள்ளது. இதில் 80 வீடுகள் இந்துக்களுக்கு தரப்பட்டுள்ளன. இவர்களும் கலவரத்தால் வீடு இழந்தவர்கள் தான்.

இனியும் மதக் கலவரத்துக்கு இடம் தந்துவிடக் கூடாது என்று இந்த விருந்தில் கலந்து கொண்ட அனைத்துப் பிரிவினரும்இறுதியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஆனால், தேர்தல் நாளை ஒட்டி மீண்டும் கலவரம் தூண்டப்படலாம் என்பதால் அப்போது மீண்டும் முகாம்களில் குடியேறிவிடகுஜராத்தில் பல பகுதிகளில் வசிக்கும் முஸ்லீம்களும் இப்போதே தயாராகி வருகின்றனர்.

தேர்தல் நாள் நெருங்க நெருங்க குஜராத் முழுவதும் அச்சமும், பாதுகாப்பின்மையும் பரவி வருகிறது.

டிசம்பர் 12ம் தேதி இந்தத் தேர்தல் நடக்கவுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+