தினகரை ஜெ. தான் தூண்டி விட்டார்: காங்கிரஸ் புகார்
சென்னை:
உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நாகப்பாவை மீட்க முன்வந்திருக்கும் கொளத்தூர் மணியைக் கைதுசெய்வோம் என்று தமிழக அரசு கூறுவது தவறு என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களில ஒருவரான பீட்டர்அல்போன்ஸ் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வீரப்பன் விவகாரம் தொடர்பாககர்நாடக முன்னாள் டிஜிபி தினகர் தெரிவித்துள்ள கருத்துக்கள், அவரது புத்தகம் ஆகியவை பல்வேறுசந்தேகங்களை எழுப்புகின்றன.
அவருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் மறைமுகமாக தொடர்பு இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.ஜெயலலிதா தூண்டிவிட்டுத் தான் தினகர் தனது புத்தகத்தை எழுதியிருக்க வேண்டும்.
நாகப்பாவை மீட்க கொளத்தூர் மணி முன்வந்துள்ளார். கர்நாடக அரசும் பல்வேறு வகைகளில் அவரைகாட்டுக்குள் அனுப்ப முயற்சி செய்து வருகிறது.
ஆனால் கொளத்தூர் மணி தமிழக எல்லைக்குள் வந்தால் கைது செய்வோம் என்று தமிழக அரசு மிரட்டுகிறது.பெங்களூரிலும் தமிழக போலீஸ் முகாமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது கர்நாடத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவேசெய்யப்படுவதாகத் தோன்றுகிறது.
கொளத்தூர் மணி மீது வழக்குகள் இருந்தாலும் கூட, நாகப்பாவை மீட்டு வந்த பிறகு அவரைக் கைது செய்துவிசாரிக்கலாம். ஆனால் அதை விடுத்து விட்டு நாகப்பாவை மீட்க விட மாட்டோம் என்று கங்கனம் கட்டிக்கொண்டு ஜெயலலிதா செயல்படுவது ஏன்?
இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
தினகர் சமீபத்தில் வெளியிட்ட புத்தகத்தில் ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்கு ரூ. 20 கோடி தரப்பட்டதாகவும், இந்தபண பட்டுவாடாவில் கிருஷ்ணா, கருணாநிதி, தூதுவராகச் சென்ற டாக்டர் பானு, ஆகியோருக்கு தொடர்புஇருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும் பணத்தைத் தரலாம் என்ற பேச்சை ஆரம்பித்து வைத்ததே ரஜினி தான் என்றும் அதில் தினகர் கூறியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
-->


