109 மண்டை ஓடுகளுடன் பொதுமக்களை பயமுறுத்திய 7 மந்திரவாதிகள் கைது
தருமபுரி:
கிருஷ்ணகிரி அருகே 109 மனித மண்டை ஓடுகளுடன் பொதுமக்களை மிரட்டி வந்த 7 மந்திரவாதிகளைபோலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி அருகே உள்ளது பச்சிகானப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் சமீபத்தில்சிவக்குமார், பழனிச்சாமி, முருகேசன், மணி, ராமலிங்கம், மோகன் மற்றும் நடராஜன் உள்ளிட்ட ஏழுமந்திரவாதிகள் குடியேறினர்.
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குடிசை போட்டு அங்கு சிலை வைத்து அடிக்கடி பூஜை நடத்தி வந்தனர்.
அந்தப் பகுதி வழியாக செல்லும் பொதுமக்களை இந்தப் பக்கம் வரக் கூடாது, வந்தால் ரத்தம் கக்கிச் செத்துவிடுவீர்கள் என்று மனித மண்டை ஓடுகளை காட்டி அந்த மந்திரவாதிகள் மிரட்டி வந்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்துமந்திரவாதிகளிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் தங்கியிருந்த குடிசையை சோதனை போட்டுப் பார்த்தபோது, 109 மனித மண்டை ஓடுகள் அங்குபுதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுதவிர ஏராளமான பூஜை பொருட்கள், செல்போன், சமையல்பாத்திரங்கள், மான் தோல்கள் ஆகியவையும் அங்கு இருந்தன.
இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், அந்த ஏழு மந்திரவாதிகளையும் கைது செய்தனர்.பூஜைக்காக சுடுகாட்டிலிருந்து இந்த மண்டை ஓடுகளை எடுத்து வந்ததாக மந்திரவாதிகள் கூறினர்.
ஆனால் அவர்கள் நரபலி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இதையடுத்து சமீபத்தில் காணாமல் போனவர்கள் பட்டியலை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தொடர்ந்து அந்த மந்திரவாதிகளிடம் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications