ஊடுருவிய தீவிரவாதிகள்: உதறலில் தமிழக போலீசார்
சென்னை:
இந்த வருடம் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதி ரம்ஜான் பண்டிகையும் வந்தபோதே மத்திய உளவுஅமைப்புகளுக்கு உதறல் எடுத்துவிட்டது.
உடனே அனைத்து மாநில காவல்துறை தலைவர்களை முடுக்கிவிட்ட மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளைதீவிரப்படுத்தியது. மேலும் உளவுப் போலீசாரின் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டது.
டிசம்பர் 6ம் தேதி பல்வேறு மாநிலங்களிலும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் போட்டிருப்பது வெளிச்சத்துக்குவந்தது. இதை முறியடிக்கும் முயற்சிகளில் இப்போது அனைத்து மாநில போலீசாரும் தீவிரமாக இறங்கியுள்ளன.
தமிழகத்தில் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு தீவிரவாதிகளின் சதியை முறியடித்து வருகின்றனர். தமிழகத்தில்ஊடுருவியதாகக் கருதப்படும் 25 தீவிரவாதிகளில் கிட்டத்தட்ட 13 பேரை மடக்கிவிட்டனர். மீதியுள்ள 12 பேரில் 5 பேர் கையில்ஆயுதங்கள், வெடிமருந்துகள் ஏதும் இல்லை என்று தெரிகிறது.
ஆனால், மிச்சமுள்ள 7 பேரிடம் வெடிமருந்துகள் கையில் இருப்பதால் இன்னும் திக்.. திக்கில் இருந்து போலீசார் வெளியேவரவில்லை.
பிடிபட்ட தீவிரவாதிகளில் ஜக்கரியா என்பவனும் தவூபிக் என்பவனும் தந்த விவரங்கள் தான் பிறரை மடக்க உதவியது.இவர்களை போலீசார் தங்கள் ஸ்டைலில் அடித்து நொறுக்கி விசாரணை நடத்தியதில் தொடர்ந்து பல திடுக் தகவல்கள் கிடைத்தவண்ணம் உள்ளன.
தாக்குதல் நடத்த ஊடுருவியுள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகள் கடந்த ஜூன் மாதத்தில் குற்றாலத்தில் கூடி ரகசிய ஆலோசனைநடத்தியுள்ள விவரம் போலீசாருக்கு இப்போது தெரியவந்துள்ளது.
இதுவரை பிடிபட்ட 13 தீவிரவாதிகளிடம் இருந்து 8 கிலோ வெடி மருந்துகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இக் கூட்டத்துக்குபெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் மைத்துனர் ஹமீத் பக்ரி தான் தலைமை வகித்துள்ளார். இந்த ஹமீத்காயல்பட்டிணத்தைச் சேர்ந்தவர். இமாம் அலியின் தங்கையை இரண்டாவது திருமணம் செய்தவர்.
அமைதியாக அரபிக் கல்லூரி நடத்தி வந்தவர் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் தீவிரவாதப் பாதையில் நுழைந்தாக போலீசார்கூறுகின்றனர்.
காயல்பட்டிணத்தில் இவரைப் பிடிக்க போலீசார் சென்றபோது மிக எச்சரிக்கையாக பலத்த ஆயுதப் படையின் உதவியுடன்சென்றனர். ஆனால், இவர் அங்கிருந்து தப்பி தஞ்சாவூரில் மறைந்திருந்தார். சிறிய ஊரான காயல்பட்டிணத்தில் நள்ளிரவில் 26போலீஸ் ஜீப்கள் புழுதியைக் கிளப்பியபடி நுழைந்தபோது ஊரே விழித்துக் கொண்டது.
அதிரடியாக 4 குழுவாக பிரிந்த அந்த ஜீப்கள் ஹமீத் பக்ரியின் கல்லூரி, வீடு, உறவினர்களின் வீடுகளில் நுழைந்து சோதனைநடத்தியது. இந்த சோதனைகளில் 15 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 250க்கும் மேற்பட்ட போலீசார்ஈடுபடுத்தப்பட்டனர்.
பிடிபடட நபர்களிடம் இருந்து பாஸ்போர்ட்களை போலீசார் கைப்பற்றியபோது அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அவற்றில்பலவும் போலியானவை என்பது தான். மும்பை, திருச்சி, சென்னை என பல ஊர் பாஸ்போர்ட் ஆபிஸ்களின்பேரில் போலியாகஇவர்களே தயாரித்துள்ளனர்.
ஆகவே இந்த பாஸ்போர்ட் மோசடி குறித்து விசாரிக்க ஒரு தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.
பிடிபட்டவர்களில் ஜக்காரியா உசேன் தான் மிகவும் அபாயமானவன் என்று தெரிகிறது. போலீசாரிடம் ஆம்லேட் போடுவதுமாதிரி மிக எளிதாக வெடிகுண்டுகளை இவன் தயாரித்துக் காட்ட ஆடிப் போயிருக்கிறார்கள் அதிகாரிகள்.
இவனைப் பிடிக்க மட்டும் மத்திய ஐ.பி. போலீசார், மாநில உளவு போலீசார் மற்றும் சென்னை போலீசார் மூவரும் சேர்ந்து ஒருபடையை அமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இந்த தீவிரவாத ஆபரேஷனுக்கு கருவூலமாக இருந்து பணத்தை அள்ளிவிட்டவன் சவுதி அரேபியாவைச் சேர்ந்தஅபு ஹம்சா. இவனுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் நேரடி தொடர்பு உண்டு. தஞ்சை மாவட்டம்மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த இம்ரான் என்பவன் மூலமாக தமிழக தீவிரவாதிகளை ஒன்றிணைத்திருக்கிறான் அபு.
அபு சவுதி நாட்டவர் என்பதால் அவரைப் பிடிப்பது கடினம். அதே போல அவரது பாதுகாப்பில் சவுதியில் இருக்கும்இம்ரானையும் பிடிப்பது எப்படி என்று போலீசாரும் மத்திய உளவுப் பிரிவினரும் கையை கசக்கி வருகின்றனர்.
-->


