விண் டிவி அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை
சென்னை:
விண் டிவி அலுவலகங்கள், அதன் தலைவர் தேவநாதனின் வீடு ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள்திடீர் சோதனை நடத்தினார்கள்.
தமிழ் கட்டண சாட்டிலைட் டிவியான விண் டிவியின் பதிவு அலுவலகம் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ளது. இதன்நிர்வாக அலுவலகம் மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ளது. விண் டிவியின் தலைவர் தேவநாதனின் வீடு தி.நகர்தீனதயாளன் தெருவில் உள்ளது.
இந்த மூன்று இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொருஇடத்திலும் 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டிவி நிறுவனத்தின் வருமானம், நிதி நிலைமை, முதலீடுகள், பார்ட்னர்கள் குறித்த ஆவணங்களை அதிகாரிகள்சோதனை போட்டனர்.
இருப்பினும் டிவி நிலைய செயல்பாடுகளை அதிகாரிகள் தடுக்கவில்லை என்று அதன் ஊழியர்கள் தெரிவித்தனர்.
தேவனாதன் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிக்சாட் வோர்ல்ட் என்ற நிறுவனம் தான் இதனை நடத்தி வருகிறது. இந்த 24 மணி நேர சாட்டிலைட் சானல் தமிழில்முதல் பே சேனலாகும். இந்தியா தவிர மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இலங்கை, வளைகுடா நாடுகளிலும்இந்த சேனல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சேனல் கடந்த பொங்கல் அன்று தனது ஒளிபரப்பைத் துவக்கியது. மலேசிய துணை அமைச்சர் டத்தோசுப்பிரமணியம் இதனைத் துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா, கனடா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த பலரும் இதில் முதலீடு செய்துள்ளதாகத் தெரிகிறது.நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சிகள் இதில் அதிகம் ஒளிபரப்பாகின்றன.
இழுத்து மூடப்பட்ட நிலா டிவியையும் இந்த டிக்சாட் வோல்ட் நிறுவனம் தான் நடத்தியது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications