சாட்டையை சுழற்றும் இந்தியன் வங்கி: பீதியில் மோசடி கும்பல்
சென்னை:
தனக்கு கட்ட வேண்டிய கடனை பாக்கி வைத்திருந்த சென்னை ஸ்ரீலேகா ஹோட்டலை இந்தியன் வங்கி கையகப்படுத்தியுள்ளது.
முன்பு இந்த வங்கியின் தலைவராக இருந்த கோபாலகிருஷ்ணனின் புண்ணியத்தால் இந்த வங்கி திவால் ஆனது. எல்லா டிவிகளிலும்இளித்துக் கொண்டே காணப்படும் கோபாலகிருஷ்ணன் பல தொழிலதிபர்களுக்கும் அரசியல் புள்ளிகளுக்கும் சினிமாகாரர்களுக்கும்முக்கியஸ்தர்களுக்கும் வங்கியின் பணத்தை கோடிக்கணக்கில் அள்ளித் தந்தார்.
இதில் பலரும் மோசடி ஆசாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழகத்தின் மிக முக்கியமான தொழில் நிறுவனங்களின் தலைவர்களும்அடங்குவர்.
இதில் பலரும் கடனை திருப்பிக் கட்டாமல் பாக்கி வைத்த பல ஆயிரம் கோடியை இழந்து திவாலானது இந்த வங்கி. ஆனால்,கோபாலகிருஷ்ணன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசியல்வாதிகள் உதவியுடன் எந்த சிக்காமல்தப்பிவிட்டார். குறிப்பாக மறைந்த மூப்பனார் மூலம் அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் உதவியுடன் தப்பினார்.
இழுத்து மூடப்படும் நிலைக்குப் போன இந்த வங்கி மத்திய அரசின் உதவியுடனும் ரிசர்வ் வங்கியின் உதவியுடன் இப்போது தான் தம்பிடித்து பிரச்சனையில் இருந்து வங்கி வெளியே வர ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் சமீபத்தில் புதிதாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி வங்கியின் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின்சொத்துக்களை வங்கியே நேரடியாக கையகப்படுத்தலாம் என்ற அதிகாரம் தரப்பட்டது. இதனால் கோர்ட்டுக்கு போய் வாய்தா வாங்கிஅலையாமல் கடன் பாக்கி வைத்திருப்பவர்களின் சொத்துக்களை வங்கியே நேரடியாக கையகப்படுத்தலாம்.
இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி முதன்முதலாக ஹோட்டலை இந்தியன் வங்கி கையகப்படுத்தியுள்ளது.
சென்னையின் மையப் பகுதியான சைதாப்பேட்டையில் அண்ணாசாலையில் உள்ள ஸ்ரீலேகா இன்டர்னேசனல் ஹோட்டல் இந்தியன்வங்கிக்கு ரூ. 12 கோடி கடன் வைத்துள்ளது.
இதையடுத்து இந்த ஹோட்டலை இந்தியன் வங்கி இப்போது தன் வசம் எடுத்துள்ளது. கிட்டத்தட்ட 9 கிரவுண்ட் நிலத்தில் உள்ளஹோட்டலின் மதிப்பு ரூ. 8 கோடியைத் தாண்டும் என்றும் தெரிகிறது.
இந்த ஹோட்டலை இந்தியன் வங்கி தானே வேண்டுமானால் நிர்வகிக்கலாம் அல்லது கையகப்படுத்திய ஒரு மாதத்தில் ஏலம்விட்டுவிடலாம். ஆனால், ஏலம் விடுவதை எதிர்த்து இந்த ஹோட்டல் நிர்வாகம் நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கியுள்ளது.
ஆனால், இந்த ஸ்டே ஆணையை ரத்து செய்யுமாறு இந்தியன் வங்கியும் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதே போல இந்தியன் வங்கியில் இருந்து சுருட்டப்பட்ட பணத்தில் கட்டப்பட்ட தியேட்டர்கள், வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், சினிமாரெக்கார்டிங் தியேட்டர்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றையும் கையப்படுத்தும் முயற்சிகளில் இந்தியன் வங்கி ஈடுபடும் என்றுதெரிகிறது.
இதனால் மோசடி ஆசாமிகள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
சில நியாயமான அதிகாரிகளின் முயற்சியால் தான் இந்த நடவடிக்கைகளில் வங்கி ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்த அதிகாரிகளை முக்கியபிரமுகர்கள் தங்கள் அதிகாரத்தை வைத்து முடக்கும் வேலையிலும் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக ஸ்ரீலேகா இன்டர்நேசனல் ஹோட்டலுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகத்தின் முக்கிய கட்சிக்கும்மிக நெருக்கமான தொடர்பு உண்டு. அவர்கள் மூலமாக ஹோட்டலை மீண்டும் பெறும் நடவடிக்கையில் ஸ்ரீலேகா நிர்வாகம் தீவிரமாகஇறங்கியுள்ளது.
ஆனால், நேர்மைக்குப் பெயர் போன இப்போதுள்ள மத்திய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் இந்தக் கட்சியின் பாச்சா பலிக்குமா என்றதெரியவில்லை.
கடன்களை ஒழுங்காக திருப்பித் தராதவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்யும் அதிகாரத்தை வங்கிகளுக்கு கிடைக்கச் செய்ய தீவிரநடவடிக்கை எடுத்தவர் ஜஸ்வந்த் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா டுடே தமிழ் பதிப்பு நடத்திய ரகசிய விசாரணையில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவும் கூட பொதுத் துறை வங்கிக்கு ரூ. 4 கோடிவரை கடன் பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இது வராக் கடன் பட்டியலில் அந்த வங்கியால் சேர்க்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-->


