"நாகப்பாவை கொன்றது கர்நாடக அதிரடிப்படைதான்": கிருஷ்ணாவுக்கு ஜெ. குற்றச்சாட்டு
சென்னை:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கொன்றது அம்மாநிலத்தைச் சேர்ந்த அதிரடிப்படையினர்தானே தவிரதமிழக அதிரடிப்படையினர் அல்ல என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கர்நாடக அரசுக்கு வீரப்பன் அனுப்பிய ஆறாவது கேசட்டில், தமிழக அதிரடிப்படையினருடன் நடந்த துப்பாக்கிச்சண்டையின்போது அவர்கள் சுட்டதில் நாகப்பா காயமடைந்ததாக அவன் கூறியிருந்தான்.
இதையடுத்து தமிழக அதிரடிப்படையினர்தான் நாகப்பாவை சுட்டுக் கொன்று விட்டதாகத் தகவல்கள்வெளியாகின. இதை ஜெயலலிதா ஏற்கனவே பலமுறை மறுத்துள்ளார். ஆனாலும் அவருடைய சாவு தொடர்பானமர்மம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் வீரப்பனைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து கர்நாடக முதல்வர்கிருஷ்ணாவுக்கு இன்று ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,
நாகப்பா கொலை செய்யப்பட்டது குறித்து பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுப்பதாகக் கூறிக் கொண்டுதேவையற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார் கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே.
ஏதோ தமிழக அதிரடிப்படையினர்தான் நாகப்பாவைக் கொன்று விட்டது போன்ற தோற்றத்தை அவருடையபேட்டிகள் ஏற்படுத்தியுள்ளன. மேலும் தமிழக அதிரடிப்படையினரின் உற்சாகத்தைக் கெடுக்கும் விதத்திலும்அவை உள்ளன. இது நிலைமையை மேலும் மோசமாக்கி விடும்.
கர்நாடகக் காட்டுக்குள் தமிழக அதிரடிப்படையினர் போகவே இல்லை என்பதையும், வீரப்பனுடன் எந்தவிதமானஎன்கெளண்ட்டரிலும் ஈடுபடவில்லை என்பதையும் ஏற்கனவே நான் கூறியுள்ளேன். இப்போதும் அதைநினைவுபடுத்துகிறேன்.
இன்னும் சொல்லப் போனால் கர்நாடகக் காட்டுக்குள் நேற்று மற்றொரு உடல் கிடைத்துள்ளதாகத் தகவல்கள்வந்துள்ளன. அந்த உடல் ஒரு கர்நாடக அதிரடிப்படை வீரருடையதுதான் என்றும் தெரிய வந்துள்ளது.
ஆகவே நாகப்பாவின் சாவில் கர்நாடக அதிரடிப்படையினருக்குத்தான் தொடர்பு உள்ளது என்றும் தெரியவருகிறது. வீரப்பனுடன் துப்பாக்கிச் சண்டை போட்டபோது அவர்கள்தான் நாகப்பாவைக் கொன்றுவிட்டதாகவும்தெரிகிறது.
மேலும் கர்நாடக அதிரடிப்படையினர் பயன்படுத்தும் துப்பாக்கித் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.இதிலிருந்து, நாகப்பாவைக் கொன்றதில் தமிழக அதிரடிப்படைக்கு சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகிறது.
எனவே இதுபோன்று பேட்டி கொடுப்பதை நிறுத்திக் கொண்டு வீரப்பனைப் பிடிப்பதற்கான உருப்படியானவழிமுறைகளை ஆராய்ந்தால் நல்லது. வீரப்பனை விரைவாகப் பிடிப்பதிலேயே கார்கே தன் முழு கவனத்தையும்செலுத்த வேண்டும்.
காட்டுக்குள் புகுந்து வீரப்பனைப் பிடிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழகஅதிரடிப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வீரப்பன் இன்னும் கர்நாடகக் காட்டுப் பகுதிக்குள்தான் ஒளிந்திருப்பதாகத் தெரிகிறது. தமிழகக் காட்டுஎல்லைக்குள் வந்தால் அவன் நிச்சயம் தமிழக அதிரடிப்படையினரிடம் பிடிபடுவது உறுதி.
ஆனாலும் வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக அதிரடிப்படையினருக்கு கர்நாடக அதிரடிப்படையினர் முறையான,முழு அளவிலான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அரசியல் ரீதியான வேறுபாடுகளை மறந்து விட்டு வீரப்பனைப் பிடிப்பதையே நாம் முக்கிய நோக்கமாகக்கொள்ள வேண்டும். இரு மாநில அதிரடிப்படையினரும் இணைந்து செயல்பட்டால்தான் வீரப்பனைப் பிடிக்கமுடியும் என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
-->












Click it and Unblock the Notifications