தலித் பிரிவு தலைவர் வெளிநடப்பு: காங். செயற்குழுக் கூட்டத்தில் பரபரப்பு
சென்னை:
சென்னையில் நடந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தலித் மக்களுக்கு போதுமானபிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்பதைக் கண்டித்து தலித் பிரிவுத் தலைவர் காமராஜ் வெளிநடப்பு செய்தார்.
தமிழக காங்கிரஸ்கட்சியின் செயற்குழுக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அகில இந்திய பொதுச்செயலாளர் ரமேஷ் சென்னிதாலா, செயலாளர் ஜி.கே. வாசன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில்மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன், மணி சங்கர அய்யர் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தலித் மக்களுக்கு கட்சி நிர்வாகப் பதவிகளில் போதிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்றுகூறிய எஸ்.சி., எஸ்.டி பிரிவு முன்னாள் செயலாளர் காமராஜ், இதுகுறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம்புகார் கொடுக்கப் போவதாக கூறி விட்டு வெளிநடப்புச் செய்வதாக கூறி வெளியேறினார்.
இதனால் கூட்டத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் கூட்டம் தொடர்ந்து நடந்தது.
கூட்டத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படக் கூடாது, நீலகிரியில் உற்பத்தியாகிகேரளா வழியாக தமிழகத்திற்குள் வரும் பவானி நதியின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட அனுமதிக்கக்கூடாது. அப்படிச் செய்தால் கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்கள் பாதிக்கப்படும். இதைத் தடுக்க தமிழக அரசுவிரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்,நதிகளை இணைப்பது தொடர்பான திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் பா.ஜக, அதிமுக தவிர்த்த மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் தலைமையில்மதச்சார்பற்ற கூட்டணியை அமைப்பது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ரமேஷ் சென்னிதாலா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் எதுவும் இல்லை. அப்படி இருந்தால் கட்சி மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்.
கோஷ்டிப் பூசலில் ஈடுபடுவோர், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடப்போர் ஆகியோர் ஒழுங்கு நடவடிக்கையைசந்திக்க வேண்டியது வரும் என்றார் சென்னிதாலா.
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications