பரபரப்பான சூழ்நிலையில் இன்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள்
சென்னை:
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் இன்று தொடங்கி 2 நாட்களுக்கு நடக்கின்றன.
சென்னை வட பழனியில் உள்ள விஜயராணி மஹாலில் இன்று காலை 10.30 மணிக்கு செயற்குழுக் கூட்டம்நடக்கிறது. பிற்பகலுக்கு மேல் விஜயசேஷ் மஹாலில் பொதுக் குழுக் கூட்டம் தொடங்குகிறது. நாளை வரைஇக்கூட்டம் நடக்கிறது.
இரு கூட்டங்களிலும் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ்கள் ஏற்கனவே அனைத்து உறுப்பினர்களும்அனுப்பப்பட்டு விட்டன. சுமார் 3,000 பேர் இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
அதிமுக அவைத் தலைவரான புலவர் புலமைப்பித்தன் இந்த இரு கூட்டங்களுக்கும் தலைமை தாங்குகிறார்.
தலைகள் உருளுமா?
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த கடந்த 19 மாதங்களில் 23 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் மூத்த அமைச்சர்களான தம்பித்துரை மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
அமைச்சரவை மாற்றங்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அதிமுகவின் செயற்குழுமற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் கூடுவது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டங்களில் அரசு, கட்சி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள் ஆகியவை குறித்துகட்சியினரின் கருத்தை ஜெயலலிதா கேட்டறிவார் என்று தெரிகிறது. மேலும் கட்சி நிர்வாகிகளையும் அவர்முழுமையாக ஆய்வு செய்யவுள்ளார்.
மேலும் சில அமைச்சர்களுக்கு ஆப்பு?
இதுதவிர புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பாகவும் ஜெயலலிதா முக்கிய முடிவு எடுக்கவுள்ளார் என்றுதெரிகிறது.
இதற்காக மேலும் சில அமைச்சர்கள் நீக்கப்படலாம் அல்லது முழுமையாக அமைச்சரவையையேமாற்றியமைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோக, கட்சிக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் முத்துச்சாமி போன்ற அனுபவசாலிகளுக்கு கட்சிப் பதவிகொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இடைத் தேர்தலில் யாருடன் கூட்டணி?
இதுதவிர சாத்தான்குளம் இடைத் தேர்தல் மற்றும் எதிர்வரும் தேர்தல்களில் யாருடன் கூட்டணி வைப்பது என்பதுகுறித்தும் கட்சியினரின் கருத்தை அறிய ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
சென்னை மேயர் தேர்தல் நடக்கவிருப்பதால் அது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications