துண்டிக்கப்பட்ட கை விரல் மீண்டும் இணைப்பு: பாண்டிச்சேரி டாக்டர்கள் சாதனை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் 25 வயது நபருக்கு துண்டிக்கப்பட்ட ஆள் காட்டி விரலை மீண்டும் ஒட்ட வைத்து சாதனைபடைத்துள்ளனர் பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் கழக டாக்டர்கள்.
சுமார் 4 மணி நேரம் வரை நீடித்த இந்த அறுவைச் சிகிச்சை கடந்த 6ம் தேதி நடந்தது. டாக்டர் ஆபிரகாம் தாமஸ்,டாக்டர் சரத் ராமதாஸ், டாக்டர் அருண், டாக்டர் ரத்னா ஆகியோர் அடங்கிய குழு இந்த அறுவைச் சிகிச்சையைவெற்றிகரமாக செய்தது.
விரல் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட இளைஞர் ஆனந்த்திற்கு உடனடியாகஅறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இதனால்தான் விரலை வெற்றிகரமாக மீண்டும் சேர்க்க முடிந்ததாக டாக்டர் ஆபிரகாம் தாமஸ் தெரிவித்தார். இவர்இதற்கு முன் பலமுறை இதுபோன்ற அரிய அறுவைச் சிகிச்சைகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் ஏழை என்பதால் அவரிடம் வெறும் ரூ.2,000 மட்டுமே வசூலிக்கப்பட்டதாக டாக்டர் சரத் ராமதாஸ்தெரிவித்தார். இந்த அறுவைச் சிகிச்சைக்கு ரூ.40,000 செலவானது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications