செல்வராஜ் கொலை வழக்கு: நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்
கோயம்பத்தூர்:
கோயம்பத்தூரில் போலீஸ்காரர் செல்வராஜ் கொலை வழக்கில் வரும் 20ம் தேதி தீர்ப்பு கூறவுள்ள நீதிபதிக்குமிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதையடுத்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி இரவு சிலரால் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்துதான் கோயம்புத்தூரில் பெரும் மதக் கலவரம் வெடித்தது.
அடுத்த சில நாட்களில் சிறுபான்மையினர் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து அல்-உம்மாஅமைப்பினர் 1998ம் ஆண்டு கோயம்புத்தூரில் தொடர் வெடிகுண்டுகளை வெடித்தனர்.
இதில் 58 பேர் பலியானார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி அந்த தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில்இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
இதற்கிடையே செல்வராஜ் கொலை வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக 35சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நடந்த இவ்வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது.வரும் 20ம் தேதி (நாளை மறுநாள்) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரேம்குமாருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அவருடையஅலுவலகத்திற்கு வந்த இந்தக் கடிதம் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அதில்,
சமீப காலமாக நடந்துள்ள மிக மோசமான சம்பவங்களில் எங்கள் சமுதாயத்தினரின் பெயர்கள் ஏன்அநாவசியமாக தொடர்புபடுத்தப்படுகின்றன?
அமெரிக்காவில் உலக வர்த்தக மையக் கட்டடங்களின் மேல் தாக்குதல் நடந்தபோதும் சரி, காஷ்மீரில் ராணுவமுகாமில் தாக்குதல் நடந்தபோதும் சரி, ரஷ்ய தியேட்டரில் தாக்குதல் நடந்தபோதும் சரி, எதற்காக எங்கள்சமுதாயத்தினர்தான் அவற்றுக்கெல்லாம் காரணம் என்று சொல்கிறார்கள்?
தொடர்ந்து எங்கள் சமுதாயத்திற்கு எதிராகக் கருத்துக்களையும், தீர்ப்புக்களையும் கூறி வந்தால் மிகவும் மோசமானவிளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
மிரட்டல் கடிதம் வந்ததைத் தொடர்ந்து நீதிபதி பிரேம்குமாருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.அவருடைய வீட்டிலும், அலுவலகத்திலும் ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications