வாளிகளில் அள்ளப்படும் வாழ்த்து அட்டைகள்

Subscribe to Oneindia Tamil

கிருஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய தினங்களையொட்டி குவியும் வாழ்த்து அட்டைகளை சேகரிப்பதற்காக சென்னைஅண்ணா சாலை தலைமைத் தபால் நிலையத்தில் வித்தியாசமான முறையைக் கையாள்கின்றனர்.

ஆண்டுதோறும் தீபாவளி, கிருஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் சீசன்களில் தபால் நிலையங்களில் லட்சக்கணக்கானவாழ்த்து அட்டைகள் வந்து குவிந்து கொண்டிருப்பது வழக்கம்.

இதுபோன்ற சீசன்களின்போது தபால் நிலைய ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டுப் போவார்கள்.

இச்சமயங்களில் அவர்களுடைய வேலை பல மடங்கு அதிகரிக்கும். அனைத்து வாழ்த்து அட்டைகளையும்,கவர்களையும் ஊர்வாரியாக, தெருவாரியாகப் பிரிப்பதற்குள் அவர்களுக்குப் போதும் போதும் என்றாகி விடும்.

இருந்தாலும் பொறுமையுடன் அனைத்துத் தபால்களையும் பிரித்து உரிய முகவரிகளில் சேர்ப்பார்கள்.

இந்நிலையில் வாழ்த்து அட்டைகளை ஊர்வாரியாகப் பிரித்து, விரைவாகப் பட்டுவாடா செய்வதற்கு வசதியாகசென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமைத் தபால் அலுவலகத்தில் நூதன முறை கையாளப்படுகிறது.

தபால் நிலைய வளாகத்தில் பல வண்ணங்களில் பெரிய பெரிய வாளிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வாளிகளில்ஊர்களின் பெயர்களையும் அந்தத் தபால் நிலையத்தினர் ஒட்டி வைத்துள்ளனர்.

எந்த ஊருக்கு வாழ்த்து அட்டைகள் போய்ச் சேர வேண்டுமோ அந்த வாளியில் அட்டைகளைப் போட்டு விடவேண்டும்.

இதன் மூலம் வாழ்த்து அட்டைகளைப் பிரிப்பது சுலமாகி, விரைவாகப் பட்டுவாடா செய்யவும் முடிகிறது என்றுதபால் நிலைய ஊழியர்கள் கூறுகின்றனர்.

முக்கிய தபால் நிலையங்களில் பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களைப் போடுவதற்காக பலவண்ணங்களில் தபால் பெட்டிகளை இந்தியத் தபால் துறை ஏற்கனவே வைத்துள்ளது.

ஆனால் அந்தத் தபால் பெட்டிகள் நிரம்பி வழிவதால்தான் தற்போது வாளிகளைப் பயன்படுத்தத்தொடங்கியுள்ளது அண்ணா சாலை தபால் நிலையம்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+