மதுரையில் கேபிள் டிவிக்கள் கட்: மக்கள் அவதி
மதுரை:
வரியையும் பதிவுக் கட்டணத்தையும் செலுத்தாமல் ஏமாற்றி வரும் பல கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது மதுரை மாநகராட்சி நடவடிக்கைஎடுத்துள்ளது. இதைக் கண்டித்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒளிபரப்பை நிறுத்தி போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் நேற்று மாலைமுதல் மதுரையின் பல பகுதிகளிலும் டிவி பார்க்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மாதம்தோறும் 1ம் தேதி ஆகிவிட்டால் கதவைத் தட்டி வீடுகளில் கட்டணத்தை வசூலித்து விடும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தாங்கள்செலுத்த வேண்டிய வரியை மட்டும் கட்டுவதில்லை.
இவர்கள் மதுரை மாநகராட்சிக்கு வைத்துள்ள வரி பாக்கி மட்டும் ரூ. 5.28 கோடியாகும். இதையடுத்து இவர்களது டிஷ்களில் இருந்துசெல்லும் முக்கிய கேபிள் வயர்களை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்ததாகக் கூறப்படுகிறது.
தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கியுள்ள நிலையிலும் மாநகராட்சிஅதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் புகார் கூறியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் ரமேஷ் நிருபர்களிடம் பேசுகையில், மதுரையில் 85,000 கேபிள் டிவி இணைப்புகள் உள்ளன (கேபிள்டிவிக்காரர்கள் காட்டும் எண்ணிக்கை இது. உண்மையில் மதுரை கேபிள் டிவி இணைப்புகளின் எண்ணிக்கை பல லட்சத்தைத் தாண்டும்.)ஒவ்வொரு வீட்டுக்கும் தரப்படும் இணைப்புக்கும் ரூ. 20யை வரியாக செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுஎங்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. பல சேனல்களும் பே சேனல்களாக மாறிவிட்டன. இதனால் அதற்கு பெரும் பணத்தை கட்டுகிறோம்.
திருச்சி மாநகராட்சியில் உள்ளது போல கட்டணத்தையும் வரியையும் குறைத்தால் நாங்களும் அதைச் செலுத்தத் தயாராக உள்ளோம்.ஆனால், மதுரையில் மாநகராட்சிக் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. எங்களது இணைப்புகளைத் துண்டித்து வரும் மாநகராட்சிஅதிகாரிகள் உடனே அந்தச் செயலை நிறுத்த வேண்டும் என்றார் ரமேஷ்.
கமிஷ்னர் பேட்டி:
கேபிள் டிவிக்காரர்களின் இந்தப் போராட்டம் குறித்து மதுரை மாநகராட்சி கமிஷ்னர் கார்த்திக் நிருபர்களிடம் கூறுகையில்,
மதுரையில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மொத்தம் 350 பேர். இவர்களில் 50 ஆபரேட்டர்கள் மட்டும் தான் ரூ. 10,000கட்டணத்தைச் செலுத்தி தங்களை முறைப்படி பதிவு செய்து கொண்டுள்ளனர்.
மற்றவர்கள் தங்களை சட்டப்படி இன்னும் பதிவே செய்யாமல் கேபிள் டிவி இணைப்பு கொடுத்து தொழில் நடத்துகின்றனர். மேலும் ஒருவீட்டுக்குத் தரப்படும் இணைப்புக்கு ரூ. 20யை மாநகராட்சிக்கு வரியாக செலுத்த வேண்டும். அதையும் இவர்கள் கட்டுவதில்லை.
இது தவிர அரசுக்குச் சொந்தமான ரோட்டில் இவர்களது வயர்கள் செல்கின்றன. அரசு சொத்தை இவர்கள் பயன்படுத்துகின்றனர். இதற்கு ஒருகி.மீ. தூரத்துக்கு ரூ. 6,300யை கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதையும் செலுத்துவதில்லை.
வரி அதிகமாக இருப்பதாக இவர்கள் கருதினால் அது குறித்துப் பேசத் தயார். இதை மாநகராட்சி மன்றத்திலும் விவாதிக்கவும் தயார் என்றார்கார்த்திக்.
பொய்யான தகவல்களையும் புள்ளி விவரங்களையும் நீதிமன்றத்தில் தந்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இடைக்காலத் தடைவாங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதனால் தான் மாநகராட்சி அதிகாரிகள் தைரியமாக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகத்தெரிகிறது.
மதுரையில் ரெளடித்தனத்துக்குப் பெயர் போன கும்பல்கள் வசம் தான் இந்த கேபிள் தொழிலும் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-->
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்!












Click it and Unblock the Notifications