பொள்ளாச்சி சிறையிலிருந்து தப்பிய கைதி சென்னையில் கைது
சென்னை:
பொள்ளாச்சி கிளைச் சிறையிலிருந்து தப்பிய அஷ்ரப் என்ற கைதி மும்பையிலிருந்த சென்னை வந்தபோது கைதுசெய்யப்பட்டார்.
கடந்த நவம்பர் மாதம் பொள்ளாச்சி கிளைச் சிறையிலிருந்து மூன்று கைதிகள் தப்பினர். அவர்களில் இருவரைஅடுத்த நாளே பொள்ளாச்சியில் வைத்து போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அஷ்ரப் என்பவர் மட்டும்பிடிபடவில்லை.
இந்நிலையில், அஷ்ரப் மும்பைக்கு தப்பி விட்டதாகத் தெரிய வந்தது. அவரை மடக்கிப் பிடிக்க முடிவு செய்தபோலீஸார் சென்னையில் உள்ள அவரது தந்தை இஸ்மாயிலை அணுகினர்.
அவரும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறினார். உடனே மும்பைக்குத்
தொடர்பு கொண்டு, தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும் உடனடியாக சென்னைக்கு வருமாறும் கூறினார்.
இதை நம்பிய அஷ்ரப் அங்கிருந்து சென்னை வந்தார். அப்போது தனிப்படை போலீஸார் அஷ்ரப்பை மடக்கிப்பிடித்துக் கைது செய்தனர். பின்னர் அவர் பொள்ளாச்சி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைதான அஷ்ரப்பை பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்துச் சென்றனர்.
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications