சாத்தான் வேதம் ஓதுவதா?: ஜெ.வுக்கு இளங்கோவன் கேள்வி
சென்னை:
லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பஸ் தொழிலாளர்கள், சாலைப் பணியாளர்களை வீட்டுக்குஅனுப்பி குடும்பங்களைப் பட்டினி போட்டுவிட்டு 5 வருடத்திற்குள் 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று ஜெயலலிதா கூறுவது சாத்தான் வேதம் ஒதுவது போல இருக்கிறது என்று காங்கிரஸ் செயல்தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில், 5வருடத்திற்குள் 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.அதை ஜெயலலிதா வழிமொழிந்துள்ளார்.
தமிழகத்தில் 10,000 சாலைப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியாகி விட்டது. 50,000க்கும் மேற்பட்டபோக்குவரத்து ஊழியர்களை அடுத்து வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை தொடங்கியுள்ளது. அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு வி.ஆர்.எஸ். கொடுத்து வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி தனியார்மயமாக்கல் கொள்கை என்ற காரணத்தைக் காட்டி லட்சக்கணக்கான பேரை வேலையிழக்கச்செய்து குடும்பங்களை பட்டினி போட்டுவிட்டு, 5 வருடத்தில் 5 கோடி பேருக்கு வேலை தர வேண்டும் என்றுஜெயலலிதா சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது.
இப்படிக் கூறுவதற்கு ஜெயலலிதாவும், வாஜ்பாயும் தகுதியானவர்கள் அல்ல என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
-->
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications