திரைப்படத் தயாரிப்பாளரை கடத்தி சென்ற போலீஸ் கும்பல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திரைப்படத் தயாரிப்பாளரைக் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டிய இரண்டு போலீஸார் உள்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திரைப்படக் கல்லூரியில் பயின்றவர் முரளி. சென்னை நகரில் செல்போன் நிறுவன ஷோரூம் வைத்துள்ளார். படம்எடுக்கவும் இவர் ஆசைப்பட்டார். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்திலும் பதிவு செய்து கொண்டார்.

இந்த விவரத்தைத் தெரிந்து கொண்ட ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ், சிட்லபாக்கம் காவல்நிலையத்தில் காவலராக இருக்கும் துரைராஜ் மற்றும் மணியன், சந்தோஷம், செல்வமணி ஆகியோர் இவரைஅணுகினர்.

படம் எடுக்க தாங்களும் உதவுவதாகக் கூறினர். அதை ஏற்றுக் கொண்டார் முரளி. இதையடுத்து அவரிடம்நெருங்கிப் பழகி அவரது சொத்து விவரங்களைத் தெரிந்து கொண்டனர்.

படம் எடுக்கும் திட்டம் இறுதியானதும் பணம் குறித்த பேச்சு வந்தது. அப்போது திருவான்மியூரில் முரளிக்குச்சொந்தமாக உள்ள ரூ. 20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அடமானம் வைத்துப் பணம் புரட்டலாம் என்றுஇவர்கள் கூறினர்.

ஆனால், சொத்தை அடமானம் வைக்க மறுத்து விட்டார் முரளி. இதையடுத்து இந்த 5 பேரும் முரளியை பரங்கிமலையில் உள்ள ஒரு பிளாட்டுக்கு கடத்திச் சென்றனர்.

அங்கு வைத்து, படம் தயாரிப்பதற்காக நாங்கள் ரூ. 2 லட்சம் வரை செலவு செய்து விட்டோம். இப்போது சொத்தைஅடமானம் வைக்க மாட்டேன் என்று கூறினால் ஏற்க முடியாது.

எனவே எங்களுக்கு ரூ. 3.5 லட்சம் பணம் கொடுத்தால்தான் வெளியே விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.தொடர்ந்து நான்கு நாட்களாக முரளியை அந்த வீட்டுக்குள் பூட்டி வைத்து சித்திரவதைப்படுத்தியுள்ளனர்.

மேலும் சில செக்குகளில் முரளியின் கையெழுத்தையும் வாங்கிக் கொண்டனர். பின்னர் அவரை வெளியேவிட்டனர். உயிர் பிழைத்து வந்த முரளி, இதுகுறித்து செங்கை கிழக்கு காவல்துறைக் கண்காணிப்பாளர்பொன்.மாணிக்கவேலிடம் புகார் கொடுத்தார்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பரங்கிமலை போலீஸாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்துபரங்கிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சப் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையின்பெயரை தவறாகப் பயன்படுத்தியவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று பொன். மாணிக்கவேல்கூறியுள்ளார்.

முரளியிடம் உள்ள கோடிக்கணக்கான பணத்தைப் பறிக்கவே இக் கும்பல் படம் எடுக்க உதவுவது போல போய்ஒட்டிக் கொண்டது என்று விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+