தனுஷ்கோடியை கடல் காவு கொண்ட தினம் இது
தனுஷ்கோடி. இந்த நகரை கடல் காவு கொண்டு இன்றோடு 38 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ராமாநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தையும் தாண்டி இந்தியாவின் தென் கோடி எல்லையாக விளங்கியநகரம்தான் தனுஷ்கோடி. இது சாதாரண நகரம் அல்ல. ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ள மிகப் பழமையான,புனிதமான நகரம்.
வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இங்கிருந்து இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கு படகுப் போக்குவரத்துநடந்துள்ளது. ராமேஸ்வரம் வரை வரும் சுற்றுலாப் பயணிகள், தனுஷ்கோடி வரை வந்து இந்தியாவின்எல்லையைப் பார்த்து விட்டுத்தான் ஊருக்குத் திரும்புவார்கள்.
அரசு அலுவலகங்களும், குடியிருப்புகளும், கோவில்களுமாக திகழ்ந்த தனுஷ்கோடி ஒரு நாள் உருத்தெரியாமல்அழிந்து போனது. 1964ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி வீசிய பயங்கர புயலில், தனுஷ்கோடி நகருக்குள் கடல் நீர்புகுந்து ஊரையே அழித்தது.
ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர். கட்டிடங்களும், பிறவும் உருத்தெரியாமல் அழிந்தன. அடுத்த சிலநாட்களில் அந்த நகரம் வெறும் எலும்புக் கூடாய் நின்றது.
வேதத்தில் இடம் பெற்ற பெருமையுடன் திகழ்ந்து கொண்டிருந்த தனுஷ்கோடி இன்று இல்லை. அது இங்குதான்இருந்தது என்பதற்கு சாட்சியமாக சில கட்டட மீதங்களும், கற்களும்தான் காணப்படுகின்றன.
வரலாற்றை அழித்து விட்ட கடலோ, அமைதியாக அருகிலேயே உருமிக் கொண்டிருக்கிறது. இன்றும் கூடராமேஸ்வரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள், தனுஷ்கோடி வரை சென்று அழிந்து போன அத்தியாயத்தைநினைவுபடுத்திப் பார்த்து விட்டு திரும்புகிறார்கள்.
இனப் போர் உச்சத்தில் இருந்தபோது இலங்கையில் இருந்து உயிர் தப்பி வந்த தமிழர்களில் பெரும்பான்மையினர்தனுஷ்கோடியின் பல தீவுப் பாறைகளில் தான் தஞ்சம் அடைந்து வந்தனர்.
ஆனால், இப்போது இந்த சிதைவுண்ட பகுதியிலும் மக்கள் நடமாட்டம் ஆரம்பித்துவிட்டது. சுற்றுலாப் பயணிகளும் வந்துசெல்வதால் சிறிய கடைகளும் வந்துவிட்டன. இங்கே இப்போது கோக் கூட வாங்க முடிகிறது.
அதே போல புயலில் தப்பிய கோதண்டராமசாமி கோவிலில் இன்னும் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன், விபீடணன்ஆகியோரின் சிலைகளும் உள்ளன. பூஜைகள் நடப்பதில்லை என்றாலும் சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது இந்தக் கோவில்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications