இன்ஸ்பெக்டர்- போலீஸ்காரர் அடிதடி: மண்டை உடைந்தது
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இன்ஸ்பெக்டர் ஒருவரும் போலீஸ்காரரும் போலீஸ் ஸ்டேசனிலேயே அடித்துக் கொண்டு உருண்டனர். இதில்ஒருவரது மண்டை உடைந்தது.
குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் அறிவானந்தத்துக்கும் போலீஸ்காரர் செல்வம் என்பவருக்கும்இடையில் தான் இந்த அடிதடி நடந்தது.
போலீஸ்காரர் செல்வம் குடிபோதையில் வந்ததாகவும் அதனால் பிரச்சனை எழுந்ததாகவும் தெரிகிறது. போதையில் வந்தசெல்வத்தை இன்ஸ்பெக்டர் அறிவானந்தம் திட்டியதாகவும் இதையடுத்து சண்டை மூண்டதாகவும் கூறப்படுகிறது.
போலீஸ் ஸ்டேசனிலேயே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருமே மிக மோசமான வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது. அப்போது கைதிகளை அடித்து விசாரிக்கபயன்படுத்தப்படும் கம்பை எடுத்து செல்வத்தை இன்ஸ்பெக்டர் அடித்துள்ளார்.
இதில் செல்வத்தின் மண்டை பிளந்தது. இதையடுத்து டேய் என்று கத்திக் கொண்டு இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த செல்வம் அவரைஅடித்து உதைத்தார். ஆனால், போதையில் இருந்து செல்வத்துக்கு மண்டையும் உடைந்தால் மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பிற போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்தபோது செல்வம் கீழே விழுந்து மண்டையை உடைத்துக் கொண்டதாக போலீசாரேபொய் கூறியுள்ளனர்.
ஆனால், இது கீழே விழுந்து ஏற்பட்ட காயம் மாதிரி தெரியவில்லை என நிருபர்களிடம் மருத்துவமனை வட்டாரங்கள்தெரிவித்தன. இதையடுத்து நிருபர்களே விசாரித்தபோது தான் போலீஸ் ஸ்டேசனில் அடிதடி நடந்து மண்டை உடைந்ததுதெரியவந்தது.
இதையடுத்து அடிபட்டுக் கிடந்த செல்வத்திடம் நிருபர்கள் சென்றனர். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என் வாயில்வேண்டுமென்றே சாராயத்தை ஊற்றி நான் குடித்துவிட்டு வந்ததாக இன்ஸ்பெக்டர் தவறான குற்றம் சாட்டினார். இதனால் தான்சண்டை வந்தது என்றார் செல்வம்.
பலர் முன்னிலையில் ஸ்டேசனில் வைத்து இவர் வாயில் இன்ஸ்பெக்டர் எப்படி சாராயத்தை ஊற்றி பொய் புகார் சொல்ல முடியும்என்று தெரியவில்லை.
ஆனால், இது குறித்து இன்ஸ்பெக்டர் அறிவானந்தம் ஏதும் பேச மறுத்துவிட்டார். இது குறித்து உயர் அதிகாரிகள் ரகசியவிசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-->


