மதமாற்ற தடை சட்டத்தை ஆதரித்து இந்து முன்னணி பேரணி
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து இந்து முன்னணி சார்பில் வரும் 4ம் தேதி வாணியம்பாடியிலும்,5ம் தேதி திருநெல்வேலியிலும் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படவுள்ளன.
இந்து முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் ராம. கோபாலன் இந்தத் தகவலை கன்னியாகுமரியில்தெரிவித்தார். அவர் கூறுகையில்,
வரும் 4ம் தேதி வாணியம்பாடியில் இந்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெறும். அதன் பிறகு 5ம் தேதிதிருநெல்வேலியிலும் இதுபோன்ற பேரணி நடைபெறும்.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து தமிழகம் முழுவதிலும் இதுபோன்ற விழிப்புணர்வு பேரணிகளைநடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார் ராம கோபாலன்.
-->












Click it and Unblock the Notifications