பிறந்தது 2003: தமிழகத்தில் கொண்டாட்டம்
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று ஆங்கிலப் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று நள்ளிரவு சரியாக 12 மணி ஆனதும், பல இடங்களிலும் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. வானவேடிக்கைகளுடன் மக்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
"விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்" என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. இசை, நடனம், ஆடல்-பாடல் என்றுஇளைஞர்-இளைஞிகளும், சிறுவர்-சிறுமிகளும் வயது வித்தியாசம் பார்க்காமல் வாழ்த்துக்களைப் பறிமாறிக்கொண்டனர்.
பலர் இரவு முழுவதும் புத்தாண்டை சிறப்பாக வரவேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
புத்தாண்டையொட்டி ஏராளமான மக்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களிலும் குவியத் தொடங்கினர்.அங்கு சிறப்புப் பூஜைகளும் நடத்தப்பட்டன. பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் உள்ளமுருகன் கோவில்களிலும், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவண்ணாமலை கோவில்களிலும் மக்கள் கூட்டம்அதிகமாக இருந்தது.
அதேபோல் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. மாநிலம் முழுவதும்பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கலங்கியது மெரினா:
இதற்கிடையே மற்ற நகரங்களைப் போலவே சென்னையிலும் புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
நேற்று மாலையிலிருந்தே மெரினா கடற்கரையில் கூட்டம் கூடத் தொடங்கி விட்டது. அதுதவிர நகரின் முக்கியசாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பைகிராப்ட்ஸ் சாலை உள்ளிட்ட பல சாலைகளிலும்இளைஞர்கள், சிறுவர்கள், முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி கூட்டம் சேரத் தொடங்கியது.
சரியாக நள்ளிரவு 12 மணி அடித்ததும் அத்தனை பேரும் "ஹேப்பி நியூ இயர்" என்று உற்சாகமாக குரல்எழுப்பியவாறு ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொண்டனர். பலர் பட்டாசுகளை வெடித்தும், பலூன்களை பறக்கவிட்டும் 2003ம் ஆண்டை வரவேற்றனர்.
சென்னை நகர் முழுவதிலும் இந்த முறை புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக இருந்தன.வழக்கத்திற்கு மாறாக, இளைஞர்கள் தவிர பெண்களும் குடும்பத்தோடு சாலைகளில் கூட்டம் கூட்டமாக நின்றுபுத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தது வித்தியாசமாக இருந்தது.
வீடுகளின் முன்பு போடப்பட்டிருந்த வண்ணக் கோலங்கள் கண்ணைப் பறித்தன. கொட்டும் பனியையும்பொருட்படுத்தாமல் சென்னை மக்கள் விடிய விடிய விழித்திருந்து புத்தாண்டை வரவேற்றனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், வடபழனி முருகன் கோவில் ஆகியகோவில்களில் நள்ளிரவிலிருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதற்கிடையே ஆங்காங்கே நடைபெற்ற சிறிய மோதல் சம்பவங்கள் காரணமாக சென்னையில் 200 பேர் வரைகைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இவை தவிர மெரினா உள்பட நகரின் எந்தப் பகுதியிலும் பெரிய அளவிலான கலாட்டாக்கள், விபத்துக்கள் எனஎந்தவிதமான அசம்பாவித சம்பவமும் இல்லாமல், சந்தோஷமாக பிறந்தது 2003.
-->












Click it and Unblock the Notifications