திண்டுக்கல் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் மீது மாணவர்கள் தாக்குதல்
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் உள்ள ஆர்.வி.எஸ். இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களால்தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் புத்தாண்டைக் கொண்டாடியது தொடர்பாக அவர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் இடையேபிரச்சனை ஏற்பட்டது.
இந்நிலையில் அக்கல்லூரி நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலிடெக்னிக்கைச் சேர்ந்த மாணவர்கள் இன்ஜினியரிங்கல்லூரிக்குள் திடீரென்று கும்பலாக நுழைந்தனர்.
அங்கிருந்த இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் உள்பட மூன்று பேரை அம்மாணவர்கள் சராமாரியாகத் தாக்கினர்.
பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். அருகிலிருந்த டெலிபோன்நிலையத்தின் மீதும் மாணவர்கள் பயங்கரத் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து ஆர்.வி.எஸ். கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருக்குத் தகவல் பறக்கவே,அவர்கள் விரைந்து வந்து அமைதி ஏற்படுத்தினர்.
கல்லூரியில் ஆயுதமேந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய மாணவர்களிடம் தீவிரவிசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
-->












Click it and Unblock the Notifications