திருச்சி அருகே கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை
திருச்சி:
திருச்சி அருகே கோவிலுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து நகை, பணம்ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டியில் செல்வ காளியம்மான் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலுக்குள் இன்று அதிகாலை புகுந்த சில கொள்ளையர்கள், அங்கிருந்த உண்டியலைப்பெயர்த்தெடுத்து அப்படியே தூக்கிச் செல்ல முயன்றனர்.
அப்போது அவ்வழியாக வந்த உள்ளூர்க்காரர் ஒருவர் அவர்களைப் பார்த்து விட்டார். உடனே நைசாக ஊருக்குள்சென்று சில மக்களைத் திரட்டிக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தார் அவர்.
அதற்குள் உண்டியலை உடைத்த கொள்ளையர்கள் அதற்குள் இருந்த நகைகளையும், பணத்தையும்,சில்லரைகளையும் சில மூட்டைகளாகக் கட்டிக் கொண்டு தப்ப முயற்சித்தனர்.
பொதுமக்கள் விரட்டத் தொடங்கவே, ஒரு மூட்டையை மட்டும் கீழே போட்டு விட்டு மற்ற மூட்டைகளுடனும்,உண்டியலுடனும் தப்பி ஓடிவிட்டனர்.
அந்த மூட்டையை போலீசார் கைப்பற்றினர். அதில் மட்டும் ரூ.5,000 மதிப்புள்ள நகைகளும் பணமும்,சில்லரைகளும் இருந்தன.
தற்போது விழாக் காலம் என்பதால் ஏராளமான பக்தர்கள் இந்த உண்டியலில் நாள்தோறும் நகை, பணம் என்றுபோட்டு வந்தனர். கொள்ளை போன நகைகள், பணத்தின் மதிப்பு எப்படியும் ரூ.20,000 வரை இருக்கும் என்றுகோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-->












Click it and Unblock the Notifications