மகாபலிபுரம் அருகே சுற்றுலா பஸ் - கார் மோதல்: 7 பேர் பலி
மகாபலிபுரம்:
மகாபலிபுரம் அருகே காரும் சுற்றுலா பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர்உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு கிளப் ஒன்றைச் சேர்ந்த 65 மாணவிகள் பாண்டிச்சேரியில் நடந்தஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.
அங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு ஒரு சுற்றுலா பஸ் மூலம் அவர்கள் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மகாபலிபுரம் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள மனமை என்ற பகுதியில் இந்த பஸ் சென்றபோதுஎதிரே வந்த குவாலிஸ் காருடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் குவாலிஸை ஓட்டி வந்த டிரைவர் வெங்கடேசன், மற்றும் அதில் பயணம் செய்த லட்சுமி (66), கலாவதி (20),சசிகுமார் (25), ராசி (2), மெதானி (3) ஆகிய ஐந்து பேரும் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.பிரியங்கா (12) என்ற சிறுமி படுகாயமடைந்தாள். அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றிஇறந்தார்.
பலியான அனைவருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தநிதி நிறுவன அதிபரான புகழேந்தி என்பவரின் உறவினர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இறந்துபோன கார் டிரைவர் வெங்கடேசனுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது. இவருடைய மனைவிநிறைமாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த பஸ்சின் டிரைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்விபத்துகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி பஸ் டிரைவரைக் கைது செய்தனர்.
-->












Click it and Unblock the Notifications