ஓடும் ரயிலில் குவா குவா!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரக்கோணத்திலிருந்து சென்னை வந்த மின்சார ரயிலில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர்ரயிலிலேயே அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அரக்கோணத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி பிரமிளா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
பிரசவ வலி எடுத்ததும் மின்சார ரயிலில் அவரை சென்னைக்குக் கொண்டு வந்தனர். சென்ட்ரல் ரயில் நிலையம்நெருங்கிக் கொண்டிருந்தபோது பிரமிளாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது.
இதையடுத்து ரயிலிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்யப்பட்டது. ரயிலில் இருந்த பெண்கள் உதவியுடன்குழந்தையைப் பெற்றெடுத்தார் பிரமிளா.
பின்னர் தாயும், குழந்தையும் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள்நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
-->












Click it and Unblock the Notifications