தெ.ஆ., வெ.இ., கனடா, ஹாலந்து, நமீபியா அணிகள்
லண்டன்:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், கனடா,ஹாலந்து மற்றும் நமீபியா அணிகளின் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகவெள்ளத்தில் ஆழ்த்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் துவங்குகின்றன.
பிப்ரவரி 9ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதி வரை இந்தப் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளன.
ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கனடா, இங்கிலாந்து, ஹாலந்து, இந்தியா, கென்யா, நமீபியா, நியூஸிலாந்து,பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே போன்ற 14 நாடுகள் இந்தஉலகக் கோப்பைப் போட்டியில் கலந்து கொள்கின்றன.
"ஏ" பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஹாலந்து, இந்தியா, நமீபியா, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வேஅணிகள் இடம்பெற்றுள்ளன. மற்ற ஏழு நாடுகளும் "பி" பிரிவில் உள்ளன.
இவற்றில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, கென்யா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கைமற்றும் ஜிம்பாப்வே ஆகிய ஒன்பது நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் பெயர்ப் பட்டியல்களை ஏற்கனவேவெளியிட்டுள்ளோம்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், கனடா, ஹாலந்து மற்றும் நமீபியா ஆகிய ஐந்து அணிகளைச்சேர்ந்த வீரர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்:
தென் ஆப்பிரிக்கா அணி:
ஷான் பொல்லாக் (கேப்டன்), மார்க் பவுச்சர், நிக்கி போஜே, பொயட்டா டிப்பென்னர், ஆலன் டொனால்டு,ஹெர்ஸல் கிப்ஸ், ஆந்த்ரே ஹால், ஜேக் கல்லிஸ், கேரி கிறிஸ்டன், லேன்ஸ் குளூஸ்னர், லாங்கேவெல்த், மக்காயாநிதினி, பேட்டர்சன், ஜான்டி ரோட்ஸ், மொண்டே ஜோண்டேகி.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
கார்ல் ஹூப்பர் (கேப்டன்), ஜேக்கப்ஸ், சந்தர்பால், பெட்ரோ ஹொலின்ஸ், ஹோலிமோர், தில்லான், டிராக்ஸ்,கெய்ல், வெவல் ஹிண்ட்ஸ், பிரையன் லாரா, லாசன், மெக்லீன், பாவெல், சாமுவேல்ஸ், சர்வண்.
கனடா அணி:
ஜோசப் ஹாரிஸ் (கேப்டன்), ஆசிஷ் பகாய், இயன்பில் கிளிப், டெஸ்மோண்ட், ஆஸ்டின் கோட்ரிங்டன், ஜான்டேவிசன், நிக்கோலஸ், நிக்கோலஸ் இபில், டவிஸ் ஜோசப், மராஜ், ஆசிஷ் பட்டேல், அப்துல் சமத், பாஷில் சமத்,சீபரன், கன்சயன்.
ஹாலந்து அணி:
ரோலண்டு (கேப்டன்), வான்டூ ரூஸ்ட், ரெயின் அவுட், லீடே, குளோபென்பர்க், நிக்ஸ்டாதம், வான்பன்கே, விக்டர்,அடீல் ராஜா, ஜான் மோல், நூர்த் விஜ்க், எட்கர், ஜேக்கப் ஜான், பாஸ்ஜுடரண்ட், ஸ்மித்ஸ்.
நமீபியா அணி:
டியோன் கோட்சே (கேப்டன்), பர்கெர், லூயிஸ் பர்கெர், சரேல் பர்கெர், கார்க், டெனி கேவுல்டர், கோட்சே,லென்னிலோ, முருகாடிராய்ட், ஸ்நேமான், சுவனேபோல், வான்ரோய், வான்ஸ்கூர், டூடிவான், ரியான் வால்டர்ஸ்.
-->












Click it and Unblock the Notifications