ஹாங்காங்கில் இந்தியர்- பாகிஸ்தானியர் மோதல்

Subscribe to Oneindia Tamil

ஹாங்காங்:

ஹாங்காங்கில் நடந்த புத்தாண்டுக் கொண்டாடத்தின்போது இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் இடையே மோதல்ஏற்பட்டது. இதில் ஒரு இந்தியர் கொல்லப்பட்டார்.

புத்தாண்டு அன்று இச் சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவில் வான்சாய் என்ற மாகாணத்தில் ஒரு விளையாட்டு அரங்கில் நடந்தஇந்த மோதலில் பாகிஸ்தானியர்கள் பீர் பாட்டில்களால் இந்தியர்களைத் தாக்கினர். இதில் 21 வயதான எம்.எஸ். குர்ரி என்றஇந்தியர் இறந்தார். இவர் ஹாங்காங்கில் குடியுரிமை பெற்றவராவார்.

இவர் தவிர ஜி.சிங் என்ற 28 இந்திய வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ஹாங்காங் காவல்துறை செய்தித் தொடர்பாளரான ரிக்கி சோங் இதனை நிருபர்களிடம் தெரிவித்தார். ஆனால், இது இருநாட்டவர்கள் என்ற ரீதியில் நடந்த சண்டை இல்லை. இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதல் தான் என்றார் அவர்.

இதுவரை இச் சம்பவம் குறித்து யாரும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பாக இந்தியத் தூதரகமோ அல்லது பாகிஸ்தான்தூதரகமோ எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை. அவை அமைதி காத்து வருகின்றன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+