தலித்துகள் விவகாரம்: சங்கராச்சாரியார் மீதான வழக்கு விசாரணைக்கு ஏற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது புதிய தமிழகம் கட்சி பொதுச் செயலாளர்துரையரசன் தொடுத்திருந்த ரிட் மனு சென்னை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் வருகிற 10ம் தேதி சாட்சிகள் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலித் சமூகத்தினர் குறித்து காஞ்சி சங்கராச்சாரியார் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அவர்களைகோவில்களுக்கு அனுமதிப்பது குறித்தும் ஆட்சேபகரமாகப் பேசியிருந்தார். இதற்கு தலித் மக்களிடையே கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந் நிலையில் தலித் மக்களை சங்கராச்சாரியார் அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி சென்னை சைதாப்பேட்டை23வது மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் துரையரசன் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அம்மனுவில்,

"தலித் மக்களை ஹரிஜன் என்றே அழைக்க வேண்டும். அவர்கள் குளிக்காமல், தூய்மையாக இல்லாமல் இருந்தால்எப்படி கோவில்களுக்குள் அனுமதிக்க முடியும்" என்றெல்லாம் பேசியுள்ளார் சங்கராச்சாரியார்.

கோவில்களுக்குள் தலித் நுழைவதைக் கட்டுப்படுத்த இவர் யார்? தனது பேச்சின் மூலம் ஒட்டுமொத்த தலித்சமுதாயத்தையே சங்கராச்சாரியார் அவமானப்படுத்தியுள்ளார்.

தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில்கூறியிருந்தார் துரையரசன்.

இந்த மனு இன்று நீதிபதி ரவீந்திர போஸ் முன்பு பரிசீலனைக்கு வந்தது. அப்போது அம்மனுவை ஏற்பதாகவும்,இதன் மீதான சாட்சிகள் விசாரணை வருகிற 10ம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி அறிவித்தார்.

தனது வழக்கு குறித்து பின்னர் நிருபர்களிடம் துரையரசன் கூறுகையில்,

தலித் மக்களை ஹரிஜன் என்றுதான் அழைக்க வேண்டும் என்று சங்கராச்சாரியார் கூறியுள்ளார். வர்ணாசிரமதர்மங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தலித் மக்களை தூய்மையில்லாதவர்கள்என்றும் வர்ணித்துள்ளார்.

இதன் மூலம் தமிழக தலித்கள் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தலித் மக்களுக்கும்சங்கராச்சாரியார் இழுக்கு ஏற்படுத்தியுள்ளார், அவதூறாகப் பேசியுள்ளார்.

இது தலித் மக்களுக்கு பெருத்த அவமானமாகும். இதைக் கண்டித்து அவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரியே இந்த வழக்குப் போடப்பட்டுள்ளது என்றார் துரையரசன்.

காஞ்சி மட பள்ளிகளில் ஜாதி பாகுபாடு?

இதற்கிடையே காஞ்சி மடத்துக்குச் சொந்தமான சங்கர மகாவித்யாலயா பள்ளியில் ஜாதி பாகுபாடுகள்காட்டப்படுவதாக சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.

பிராமணர்களுக்கு ஒரு விடுதியும், பிராமணரல்லாத பிற மாணவர்களுக்கு ஒரு விடுதியும் நடத்தப்பட்டு வருவதைகாங்கிரஸ் சுட்டிக் காட்டியிருந்தது.

இதுகுறித்து கட்சியின் செயல் தலைவரான இளங்கோவனிடம் கோயம்புத்தூரில் நிருபர்கள் கேட்டபோது,

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவரான சோ. பாலகிருஷ்ணனை சங்கராச்சாரியார் தொடர்பு கொண்டுபேசினார். ஜாதி பாகுபாடு ஏதும் நடக்கவில்லை என்றும் அதை காஞ்சிபுரத்துக்கு நேரடியாகவே வந்து பார்த்துக்கொள்ளலாம் என்றும் பாலகிருஷ்ணனுக்கு சங்கராச்சாரியார் அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி ஒரு குழு விரைவில் சங்கர மகாவித்யாலயாவுக்குச் செல்லும் என்றார் இளங்கோவன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+