""மதம் குறித்த விவாதங்கள் வேண்டாமே"": ராமதாஸ் வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதம் குறித்தும் கடவுள் குறித்தும் மாறி மாறி விவாதிப்பதை அரசியல் கட்சிகள் நிறுத்திக் கொண்டு, மக்கள்பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இந்துத்துவா குறித்து திமுக தலைவர் கருணாநிதியும், பா.ஜ.க. தலைவர்கள் சிலரும் சமீப காலமாக அறிக்கைப்போர்கள் நடத்திக் கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக சென்னையில் இன்று நிருபர்களிடம் ராமதாஸ்பேசுகையில்,

சில அரசியல் கட்சிகள் மதம் மற்றும் கடவுள் குறித்து மாறி மாறி விவாதித்தும், விமர்சித்தும் வருகிறார்கள்.

இது தொடர்பாக நாள்தோறும் அறிக்கைகளும் பேட்டிகளும் கூட கொடுத்து வருகிறார்கள்.

இதை உடனடியாக அவர்கள் கைவிட்டு விட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின்வளர்ச்சி குறித்தும், மாநில வளர்ச்சி குறித்தும் மட்டுமே அவர்கள் அக்கறை காட்ட வேண்டும்.

காவிரிப் பிரச்சினையில் அதிமுக அரசின் தவறான அணுகுறையால் இப்போது சம்பா பயிரும் கருகும் பரிதாபநலை ஏற்பட்டுள்ளது. இந்த அவல நிலையால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டான்சி நில வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள அப்பீல் மனு மீதான தீர்ப்பு வருவதற்கு முன்பே டான்சிநிலத்தை ஒப்படைத்துள்ளார் ஜெயலலிதா. இதற்கான அவசியம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும்.

பொங்கல் தினத்தன்று ஏழை மக்களுக்கு தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுமா என்பதை அரசுவிளக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+