தமிழகம் முழுவதும் பஸ், ரயில் மறியல்: ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கைது
சென்னை:
தமிழகம் முழுவதும் பஸ் மற்றும் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய,மாநில அரசுகளின் தனியார்மயமாக்கலை கண்டித்தும், இரண்டு ஆண்டுகளாக போனஸ் வழங்காமல் இழுத்தடித்து வரும்தமிழக அரசைக் கண்டித்தும், அரசுப் போக்குவரத்தை தனியார்மயமாக்குவதை எதிர்த்தும், மதமாற்றத் தடைச் சட்டத்தைஎதிர்த்தும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் ரயில் மறியலிலும் பஸ் மறியலிலும் ஈடுபட முயன்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் சார்பில் இப் போராட்டம் நடந்தது. சென்னையில் சி.ஐ.டி.யு. தலைவர செளந்தர்ராஜன்தலைமையில் நடந்த இப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் நுழைந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால்தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைத்துத் தொழிலாளர்களையும் போலீசார் கைது செய்தனர்.
அதே போல திருச்சியில் ஜங்சன் அருகே போராட்டம் நடத்திய 2,000 பேரும், மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரேகட்டபொம்மன் சிலையில் இருந்து தலைமைத் தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கானவர்கள்கைது செய்யப்பட்டனர்.
கோவையில் காந்திபுரம் அருகே கூடி போராட்டம் சாலை மறியல் போராட்டம் நடத்திய 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.இதுபோல தமிழகம் முழுவதுமே தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கமாக அதிமுக ஆட்சியில் போராட்டம் நடத்துபவர்களை போலீசாரை விட்டு தடியடி நடத்தி ரத்தம் சொட்ட சொட்ட ஓடவைத்து போராட்டத்தை அடக்குவது வழக்கம். ஆனால், இப்படி அடக்கப்பட்ட போராட்டங்களுக்கு மனித உரிமைஅமைப்புகளிடம் இருந்தும், நீதிமன்றங்களிடம் இருந்தும் கண்டிப்பு வந்ததால் இம் முறை அடாவடி செயல் எதிலும் போலீசார்ஈடுபடவில்லை.
ஜனநாகயரீதியில் போராட்டம் நடத்தியவர்களை அமைதியான முறையிலேயே கைது செய்து கொணடு சென்றனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications