இலங்கை சீரமைப்பு நிதியை உலக வங்கி நிர்வகிக்கும்

Subscribe to Oneindia Tamil

நாகோன் பதோம்:

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளை சீரமைப்பதற்காக பல்வேறு நாடுகளில்வசூலிக்கப்படும் நிதியை உலக வங்கியின் நிர்வாகத்தின் கீழ் விட்டுவிடுவது என விடுதலைப்புலிகளுக்கும்இலங்கை அரசுக்கும் இடையே இன்று முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டது.

இலங்கையின் மறு சீரமைப்புப் பணிகளுக்காக கடந்த நவம்பர் மாதம் நார்வேயின் நிதி திரட்டும் மாநாடுநடைபெற்றது.

அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நிதி அளிக்க முன் வந்துள்ளன. அடுத்த மாநாடு ஜப்பானில் நடைபெறஉள்ளது.

இந்நிலையில் தாய்லாந்தில் நான்காவது சுற்றின் மூன்றாவது நாள் பேச்சுக்கள் இன்று காலை தொடங்கின.அப்போதுதான் உலக வங்கியிடம் நிதி விவகாரத்தை ஒப்படைப்பது குறித்த முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டது.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை அரசுடன் மட்டும்தான் கையெழுத்திடுவோம் என்று உலக வங்கி முன்புகூறி வந்தது.

ஆனால் தற்போது புலிகளுடனும் சேர்ந்து கொண்டு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உலக வங்கிசம்மதித்துள்ளது.

முக்கிய கமிட்டியில் இருந்து புலிகள் விலகல்:

இதற்கிடையே வட- கிழக்குப் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவம் வெளியேற விதிக்கப்படும் நிபந்தனைகளை எதிர்த்து முக்கியமான கமிட்டியில்இருந்து புலிகள் இயக்கம் வெளியேறிவிட்டது.

வட-கிழக்குப் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பான பிரச்சனைகளை ஆராய ஒரு துணை கமிட்டி (Sub Committee onDe-escalation and Normalisation (SDN)) அமைக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை அரசும் இடம் பெற்றுள்ளது.

ஆனால், தமிழர்களின் வீடுகளை ஆக்கிரமித்துத் தங்கியுள்ள ராணுவத்தினரை வெளியேற்ற வேண்டுமானால் புலிகள் தங்கள்ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அரசு நிர்பந்தம் விதித்து வருகிறது.

இந் நிலையில் தாய்லாந்தில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 4வது சுற்றுப் பேச்சுவார்த்தையின் இரண்டாவதுநாள் ஆலோசனைகள் நேற்று தொடங்கின. இந்தப் பேச்சை முடித்துவிட்டு வெளியே வந்த புலிகளின் அரசியல் ஆலோசகர்ஆண்டன் பாலசிங்கம், படை விலக்கம் தொடர்பான துணைக் கமிட்டியில் இருந்து புலிகள் விலகுவதாக அறிவித்தார். அதேநேரம் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடக்கும் என்றார்.

இதையடுத்து இன்று 3வது நாள் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. பேச்சு தொடங்கிய உடனேயே இந்தக் கமிட்டியைக்கலைத்துவிட வேண்டும் என புலிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க இலங்கை அரசுத் தரப்பினர்மறுத்துவிட்டனர்.

இது குறித்து இலங்கையின் தலைமை அமைதித் தூதர் பெரிஸ் நிறுபர்களிடம் கூறுகையில், இந்தக் கமிட்டியின் செயல்பாடு குறித்துபுலிகளுக்கும் எஙகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பது உண்மை தான். ஆனால், அதற்காக அக் கமிட்டியையேகலைக்க வேண்டும் என்று கோருவதை ஏற்க முடியாது என்றார்.

ஆனால், இந்த கருத்து வேறுபாடுகளையும் மீறி இன்று பேச்சுவார்த்தைகள் சுமூகமாகவே நடந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+